தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை என சமூக அக்கறை கொண்ட சிறந்த திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வழங்கியவர். கம்யூனிசம் குறித்து தனது ஒவ்வொரு திரைப்படங்களின் வாயிலாகவும்  தமிழ் ரசிகர்களுக்கு திகட்டாமல் பாடம் புகட்டும் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் கடந்த மார்ச் 14-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார்.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடைசியாக எழுதி இயக்கிய லாபம் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் ஜெகபதி பாபு சாய் தன்ஷிகா ரமேஷ் திலக் கலையரசன் நித்திஷ் வீரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள லாபம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசை அமைத்துள்ளார் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் 7cs என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் பி.ஆறுமுக குமார் இணைந்து தயாரித்துள்ளனர். 

முன்னதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ,லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.