சூரரைப் போற்று படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வெளியானது !
By Sakthi Priyan | Galatta | July 23, 2020 09:47 AM IST
2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதை மற்றும் உருவான விதத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்திலிருந்து காட்டு பயலே பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த ரொமான்டிக் ப்ரோமோ திரை விரும்பிகளை ஈர்த்து வருகிறது. பாடகி தீ பாடிய இந்த பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.
பாடல் ப்ரோமோவில் ஹீரோ ஹீரோயின் திருமண காட்சிகளை கொண்டு வடிவமைத்துள்ளனர். நடிகை அபர்ணா பாலமுரளியின் எதார்த்தமான நடிப்பு மற்றும் எக்ஸ்ப்ரெஷன்ஸ் அசத்தலாக அமைந்துள்ளது. கிராமத்து பாணியில் இருக்கும் இந்த காதல் பாடலை ரசித்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.
லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் வாடிவாசல் போன்ற படங்களின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Suriya's Soorarai Pottru - Kaattu Payale Video Song is out - Don't miss!
23/07/2020 10:00 AM
Boney Kapoor to remake Ajith's blockbuster film? Important Clarification
22/07/2020 07:31 PM
Sushant Singh Rajput's last film Dil Bechara Release Time Revealed!
22/07/2020 07:09 PM