பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா ஷாஜி.. உற்சாகத்தில் ரசிகர்கள் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமலா ஷாஜி - Amala Shaji enter to Bigg Boss season 5 Malayalam | Galatta

வெள்ளித்திரை நடிகைகளுக்கே சவால் விடும் அளவு ரசிகர்களை கொண்டுள்ள சோஷியல் மீடியா நட்சத்திரம் தான் இந்த அமலா ஷாஜி. மிகப்பெரிய அளவு பாலோவர்ஸ் வைத்து நாளுக்கு நாள் தனது ரசிகர் வட்டத்தை பெரியதாக்கி வரும் சோஷியல் மீடியா பிரபலம். சகோதரி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்வது, சோலோ டான்ஸ், குட்டி கதை, ஒரு பிரபல காட்சியை ரி கிரியேஷன் செய்வது என வகை வகையான வீடியோக்களை தனது சமூக தளங்களில் பதிவிட்டு பிரபலமானவர். இவரை பின் தொடர்பவர்களில் 100ல் 90 பங்கு 2K கிட்ஸ் என்று சொல்லப்படும் 2000 த்திற்கு பிந்தைய பிறந்தவர்கள் தான் அதிகமாக இருக்கிறார். கிட்டத்தட்ட அவர்களின் கனவு கன்னியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.  

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் அமலா ஷாஜி. கேரளா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் நாட்டில் அதிகம் என்றே சொல்லலாம். 20 வயதே ஆன இவருக்கு ரசிகர் மன்றங்கள் சமூக வலைதளங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் அமலா ஷாஜி எப்போது திரைப்படங்களில் நடிப்பார் என்ற கேள்வி அவரது ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அந்த முயற்சிக்கு அடிபோடும் வகையல் பிரபல தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிக பிரம்மாண்டமான தொலைக்காட்சி தொடரான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் 6 சீசனை கடந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.

ஏசிய நெட் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன் லால் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த மலையாளம் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசங்கள் நிறைவடைந்து 5 வது சீசன் நடைபெறவுள்ளது. வரும் மார்ச் 26 பிரம்மாண்டமாக மலையாளம் பிக்பாஸ் 5வது சீசனின் தொடக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்த சீசனில் முதல் முறையாக மலையாளத்தில் பொதுமக்களும் பங்கெடுக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த சீசனில் போட்டியிடும் போட்டியாளர்கள் குறித்த  ஹின்ட்களை தொலைக்காட்சி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில்

 

 பதிவில்,  3.6 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ள சமூக வலைதள பிரபலம் கலந்து கொள்ள போவதாக வெளியிட்டிருந்தனர். அதன்படி ரசிகர்கள் அது அமலா ஷாஜி என்று உறுதி செய்து அந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிரபலமான அமலா ஷாஜி தற்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து பின்னாளில் வெள்ளித்திரைக்கு செல்ல அதிகளவு வாய்ப்பு உள்ளது என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 67வது படமான லியோ படத்தில் அமலா ஷாஜி நடிக்கிறார் என்ற வதந்தி பரவியது.  அதற்குத் தகுந்தாற்போல், அவர் காஷ்மீருக்கு சென்றதும், திரும்பியதுமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.
சினிமா

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.

ஒரே நேரத்துல 3 பேரை Love பண்ணேன்.. உண்மையை உடைத்த நடிகை ஷகீலா -  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஒரே நேரத்துல 3 பேரை Love பண்ணேன்.. உண்மையை உடைத்த நடிகை ஷகீலா - வைரலாகும் வீடியோ இதோ..

“தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இப்படித்தான்...” புகழ்ந்து தள்ளிய ஆங்கிலேய நடிகர் டேனியல்  கால்டாகிரோன் – முழு வீடியோ இதோ..
சினிமா

“தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இப்படித்தான்...” புகழ்ந்து தள்ளிய ஆங்கிலேய நடிகர் டேனியல் கால்டாகிரோன் – முழு வீடியோ இதோ..