'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் ரிலீஸ் எப்போது?.. படக்குழு வெளியிட்ட அட்டகாசமான அப்டேட் – வைரலாகும் பதிவு இதோ.

இந்தியில் சூரரைப் போற்று ரிலீஸ் தேதி இதோ - Soorarai Potru Hindi Remake Release Date Out Now | Galatta

சமகால தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று சூரரைப் போற்று. இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவு கவனம் பெற்று இந்திய அளவு கொண்டாடப் பட்ட திரைப்படமாக சூரரைப் போற்று திரைப்படம் அமைந்தது. திரையரங்கை தாண்டி கொரோனா காலத்தில் பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மிக அழுத்தமான கதையை கச்சிதமான திரைக்கதையின் மூலம் மக்களை எளிதில் சென்றடைந்து பரவலான வெற்றியை பெற்றது. சூர்யாவின் முந்தைய படங்கள் எதுவும் சரியாக போகாத போது சூர்யா திரைப்பயனத்தில் திருப்புமுனையாக அமைந்தது சூரரைப் போற்று என்று சொன்னால் மிகையாகது.

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படம் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தயாரிப்பு, சிறந்த இசை மற்றும் சிறந்த இயக்கம் என்று பல பிரிவுகளில் தேசிய விருதினை குவித்தது. இவ்வளவு வரவேற்பு மக்களிடமும் திரையுலகிலும் வந்தாலும் மக்களுக்கு பெருமளவு வருத்தமாக இருப்பது சூரரைப் போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாமல் போனது தான். பிரம்மாண்டமான காட்சியையும் உணர்வையும் சுமந்த சூரரை போற்று நிச்சயம் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டிய திரைப்படம் தான் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் இந்தியில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யபடுவதாக இயக்குனர் சுதா கொங்கரா அறிவிப்பை வெளியிட்டார். இப்படத்தினை சூர்யா, ஜோதிகா  வின் 2D தயாரிப்பு நிறுவனம்  உடன் இணைந்து அருணா பாத்யா மற்றும் விக்ரம் மல்கோத்ரா ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

தமிழில் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற சூரரைப் போற்று இந்த முறை மேலும் பிரம்மாண்டம் சேர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது ககுறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வந்தனர். மேலும் இப்படத்தில் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன்படி மேலும் படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்தது.  இப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் உடன் இணைந்து ராதிகா மதன் ஹீரோயினாக நடிக்கிறார்.இப்படத்திற்கும்  ஜீ வி பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெயரிடப்படாத சூரரைப் போற்று இந்தி ரீமேக் திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில்  தற்போது படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி சூரரைப் போற்று இந்தி ரீமேக் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவுள்ளது.இந்த அறிவிப்பினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.  
 

 

Ready to soar! ✈️

Directed by National Award winner @Sudha_Kongara and starring @akshaykumar #RadhikaMadan and @SirPareshRawal, Production No. 27 releases in theatres worldwide on 1st September, 2023.#Jyotika @Suriya_offl @vikramix @rajsekarpandian @2D_ENTPVTLTD @CaptGopinath pic.twitter.com/EhNS8QP4PF

— Abundantia (@Abundantia_Ent) March 21, 2023

 

ரசிகர்கள் மனதை கவர்ந்த அஜித் ஷாலினி Couple Goal..  இணையத்தில் வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

ரசிகர்கள் மனதை கவர்ந்த அஜித் ஷாலினி Couple Goal.. இணையத்தில் வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்.. வைரல் பதிவு இதோ..

பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவம்.. - தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவம்.. - தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

வெற்றிமாறனின் 'விடுதலை' பட ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு  -  அட்டகாசமான Glimpse உடன் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வெற்றிமாறனின் 'விடுதலை' பட ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு - அட்டகாசமான Glimpse உடன் வைரலாகும் பதிவு இதோ..