முதல்வரின் பாராட்டை பெற்ற ஆஸ்கார் இயக்குனர் - ‘தி எலிபென்ட் விச்பரர்ஸ்’ இயக்குனருக்கு குவியும் வாழ்த்துகள் ..

முதல்வரை சந்தித்த ஆஸ்கார் விருதை வென்ற இயக்குனர் கார்த்திகி கான்சால்வேஸ் -  Oscar Winning Director meets Tamilnadu CM MK Stalin | Galatta

உலகின் தலை சிறந்த விருது என்று கலைஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விருதான ஆஸ்கார் விருது விழாவின் 95 வது ஆண்டின் விழா சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் ல் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து பல தரப்பட்ட பிரிவுகளில் படங்கள் போட்டியிட்டன. இதில் இந்திய நாட்டு சார்பில்  சிறந்த பாடல் பிரிவில் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தின்  நாட்டு நாட்டு பாடல் விருதினை வென்றது. சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்'  விருதினை வென்றது. இந்த நிகழ்வினை நாடு முழுவதும் கொண்டாடி தீர்த்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானை முகாமில் பணிபுரியும் பழங்குடியினரான பொம்மன் மற்றும் பெல்லி தம்பதிகள் கடந்த 2017 ம் ஆண்டு ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றி திரிந்தை மீட்டு காப்பகத்தில் சேர்த்து ரகு என பெயரிட்டு பராமரித்து வந்தனர். இந்த நிகழ்வையும் யானையுடன் தம்பதியினரின் உணர்வு பூர்வமான உறவையும் பேசிய தி எலிபென்ட் விச்பரர்ஸ் என்ற பெயரில் இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆவண குறும்படமாக எடுத்திருப்பார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரிய அளவு பேசப்பட்டது. தற்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கார் விருது பெற்றதையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் படக்குழுவினரை வாழ்த்தி வந்தனர்.

இந்நிலையில் ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்'  பட இயக்குனர் கார்த்திகி கான்சால்வேஸ் அவர்களை தமிழ் நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து அவர்களுக்கு ஊக்க தொகையாக ரூ 1 கோடியை வழங்கினர். இந்த நிகழ்வு குறித்து இயக்குனர் கார்த்திகி கான்சால்வேஸ் பேசியது,

முன்னதாக பழங்குடி தம்பதியினரான பொம்மன் பெல்லி அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

“Adjustment பண்ணா நிறைய வாய்ப்பு கிடைக்கும்” உண்மையை உடைத்த நடிகை ரேஷ்மா பிரசாத்  - முழு வீடியோ இதோ..
சினிமா

“Adjustment பண்ணா நிறைய வாய்ப்பு கிடைக்கும்” உண்மையை உடைத்த நடிகை ரேஷ்மா பிரசாத் - முழு வீடியோ இதோ..

“ஜிகர்தண்டா Double X படத்தில் இப்படிதான் Music இருக்கும்” சந்தோஷ் நாராயணன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

“ஜிகர்தண்டா Double X படத்தில் இப்படிதான் Music இருக்கும்” சந்தோஷ் நாராயணன் – சுவாரஸ்யமான தகவல்களுடன் வைரலாகும் முழு வீடியோ இதோ..

“ஆஸ்கார் விருதெல்லாம் பெரிய விருதுனு நான் நினைச்சதே இல்லை” இயக்குனர் அமீர் -   இணையத்தில் வைரலாகும் பரபரப்பான பேச்சு.. விவரம் இதோ..
சினிமா

“ஆஸ்கார் விருதெல்லாம் பெரிய விருதுனு நான் நினைச்சதே இல்லை” இயக்குனர் அமீர் - இணையத்தில் வைரலாகும் பரபரப்பான பேச்சு.. விவரம் இதோ..