ஒரே நேரத்துல 3 பேரை Love பண்ணேன்.. உண்மையை உடைத்த நடிகை ஷகீலா - வைரலாகும் வீடியோ இதோ..

கடந்த காதல்கள் குறித்து நடிகை ஷகீலா பகிர்ந்த சுவாரஸ்மான வீடியோ - Actress Shakeela About her past love stories | Galatta

தென்னிந்தியா சினிமா உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரு நடிகையின் திரைப்படத்துடன் இணைந்து களமிறங்க பயந்தனர். ரசிகர்களை கவர்ச்சியான நடிப்பின் மூலம் கவர்ந்த திரை ஆளுமை நடிகை ஷகீலா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில்  மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை ஷகீலா. கவர்ச்சியான படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் சிறப்பு தோற்றத்தில் பல படங்களில் நடித்தவர். ஷகீலா என்றாலே கவர்ச்சி என்ற பொதுவான கண்ணோட்டம் மக்களிடம் இருந்து வந்தது. அதனை மாற்றும் அளவு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த காலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையாகாது.

சமையல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் அவரது தாய்மையான குணம் தெரியவந்தது. அதன் பின் ஷகீலா என்றாலே அன்பான அரவணைப்பு என்ற எண்ணம் மட்டுமே தற்போது மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் மீடியா ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் நடிகை ஷகீலா கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில்

"எனக்கு 10 வயசுல ஒரு காதல் இருந்தது. அவருடைய வாழ்க்கை என்னால தான் போச்சு.. நான் அப்போது ஒரே நேரத்தில் 2,3 காதல் செய்திருந்தேன். அப்போ எனக்கு காதல் னா என்னனே தெரியாது. இன்னொருவர் இப்போது நடிகராக இருக்கிறார். அவருக்கு இன்னிக்கு வரைக்கும் கல்யாணம் ஆகல.. என்ன படுத்தினதால அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல..  அதுக்கப்புறம் இன்னொருத்தர் இப்போது திருமணம் ஆகியுள்ளது. ஆனா அவர் மாட்டிக்கிட்டு இருக்காரு பாரு ஒருத்திக்கிட்ட.. கொடுமையிலும் கொடுமையா அவருடைய மனைவி வந்து அமைந்திருக்கு.. சட்னியில் ஒரு மிளகாய் அதிகமாய் போட்டதுக்கு அவன் சட்டனியை தள்ளி விட்டான்.. இன்னிக்கு அவன் மனைவி சரியா சமைக்கலனு என்கிட்ட வந்து புலம்பிட்டு இருக்கான்..நான் பத்து வருஷம் காதலிச்சவர் நான் விட்டுட்டு போன சில மாதங்களில் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார்.  அப்போ அவன் காதல் எந்த வகையில் தான் இருந்தது.. இவங்க எல்லோரும் ஒவ்வொரு வகையில் என்னை கஷ்டப்படுத்திருக்காங்க.. இவங்க எல்லோரு வகையில் எதோ ஒரு வகையில் நான் உதவி செஞ்சிருக்கேன்.." என்றார்.

மேலும் திரைப்பிரபலம் ஷகீலா பேசிய சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ..

 

 

பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவம்.. - தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவம்.. - தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

வெற்றிமாறனின் 'விடுதலை' பட ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு  -  அட்டகாசமான Glimpse உடன் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வெற்றிமாறனின் 'விடுதலை' பட ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு - அட்டகாசமான Glimpse உடன் வைரலாகும் பதிவு இதோ..

பிரம்மாண்டமாக உருவாகும் 'சூர்யா 42'.. தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா பகிர்ந்த பட்ஜெட் விவரம்..-  ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

பிரம்மாண்டமாக உருவாகும் 'சூர்யா 42'.. தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா பகிர்ந்த பட்ஜெட் விவரம்..- ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..