44 வயதில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை - 'அருவி' லாவண்யா திருமணத்திற்கு குவியும் வாழ்த்து.. விவரம் இதோ..

அருவி லாவண்யா தனது 44 வயதில் திருமணம் புரிந்து கொண்டார் - Aruvi Serial Actress Lavanya married at 44 age | Galatta

90 களில் திரையில் அடிக்கடி பார்க்கும் பரிச்சையமான குணச்சித்திர கதாபாத்திர முகம் லாவண்யா. தமிழ் சினிமாவில் சூரிய வம்சம் படம் மூலம் குணச்சித்திர நடிகையாக பிரபலமடைந்த லாவண்யா தொடர்ந்து தமிழ் சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.‌ அதன்படி பத்ரி, தெனாலி,படையப்பா, மிலிட்டரி, வில்லன், ஜோடி, சேது, சுந்தரா டிராவல்ஸ், சமுத்திரம், எதிரி, ரன் மற்றும் திருமலை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 90 களில் பிறந்தவர்களுக்கு உடனே கண்டறியும் முகமாகவும் பிரபலமான குணச்சித்திர நடிகையாகவும் இருந்தவர் லாவண்யா திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்கள் பெரிதளவு கிடைக்காததைஅ சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க தொடங்கினார்.

அதன்படி பல ஆண்டுகளாக சின்னதிரையில் மக்களிடையே பிரபலமான லாவண்யா. தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் மகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அருவி' தொடரில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் மக்களிடையே மிகப்பெரிய பிரபலமானது. இந்த தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதன் படி மீண்டும் மக்கள் மத்தியில் புகழ் பெற தொடங்கினார் லாவண்யா. தற்போது ரசிகர்களால் லாவண்யா 'அருவி' லாவண்யா என்று அழைக்கப்பட்டு வருகிறார். வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பிரபலமான அருவி லாவண்யா தற்போது தனது 44 வயதில் பிரசன்னா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. திருமணத்திற்கு அருவி தொடர் குழுவினர் மற்றும் திரை நட்சத்திரங்கள் வருகை தந்தனர்.

தாமதமாக திருமணம் செய்து கொண்டாலும் ரசிகர்கள் மத்தியல் பெருமளவு வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது.‌சமூக வலைதளங்களில் அருவி லாவண்யா பிரசன்னா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இப்படித்தான்...” புகழ்ந்து தள்ளிய ஆங்கிலேய நடிகர் டேனியல்  கால்டாகிரோன் – முழு வீடியோ இதோ..
சினிமா

“தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் இப்படித்தான்...” புகழ்ந்து தள்ளிய ஆங்கிலேய நடிகர் டேனியல் கால்டாகிரோன் – முழு வீடியோ இதோ..

ரசிகர்கள் மனதை கவர்ந்த அஜித் ஷாலினி Couple Goal..  இணையத்தில் வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

ரசிகர்கள் மனதை கவர்ந்த அஜித் ஷாலினி Couple Goal.. இணையத்தில் வைரலாகும் சுற்றுலா புகைப்படங்கள்.. வைரல் பதிவு இதோ..

பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவம்.. - தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படப்பிடிப்பில் நிகழ்ந்த சம்பவம்.. - தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..