"இது என்ன பண்ணக்கூடாத காரியமா?"- காதலை வெளிப்படையாக தெரிவித்தது பற்றி பிரியா பவானி சங்கரின் செம்ம பதில்! வீடியோ இதோ

காதலரை வெளிப்படையாக தெரிவித்தது பற்றி பிரியா பவானி சங்கரின் பதில்,priya bhavani shankar about her boy friend in galatta tamil | Galatta

தனது கல்லூரி சமயத்தில் இருந்து நீண்ட காலமாக திரு.ராஜவேல் அவர்களை காதலித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலை வெளிப்படையாக அறிவித்தது குறித்து தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து டிமான்டி காலணி 2, ஜீப்ரா, அரண்மணை 4 அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJசூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை. மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராதா மோகன் பொம்மை படத்தை எழுதி இயக்கியுள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும்  மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். 

ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரித்துள்ள பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்குகிறார். SJ.சூர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளிக்க நடிகை பிரியா பவானி சங்கர் நம்மோடு பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் அவரிடம், “நீங்கள் குறிப்பிட்டது போல திரைத்துறையில் பாய் ஃபிரண்ட் இல்லை என்பது போல அல்லது இதுவுமே நிறைய பேர் சொல்ல மாட்டார்கள் எனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கிறார் என்பது போல.. நீங்கள் அதையும் வெளிப்படையாக தெரிவித்தது ஏதாவது எதிர்மறையாக ஆகிறதா?” எனக் கேட்டபோது, 

“இது ரகசியம் இல்லை… இது எப்போதும் ரகசியமாக இருக்கப் போவதுமில்லை.. கல்லூரியில் இருந்து நாங்கள் வெளியில் செல்கிறோம் அதனால் இது எப்போதுமே ரகசியமாக இருந்ததில்லை. அதற்காக நான் என்னுடைய சமூக வலைதளங்களில் இருக்கும் என்னுடைய பழைய புகைப்படங்களை திடீரென நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய வேலை தற்போது மாறிவிட்டது என்பதற்காக... அதெல்லாம் அப்படியே இருக்கிறது அவ்வளவு தான். யார் தான் காதலிக்காமல் இருக்கிறார்கள். இது என்ன பண்ண கூடாத காரியமா? எல்லோருமே ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் நான்காம் வகுப்பு படிக்கிறவர்களுக்கு கூட பாய் பிரண்டு இருக்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட பிரியா பவானி சங்கரின் அந்த ஸ்பெஷல் பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

வேகமெடுக்கும் ஜெயம் ரவியின் இறைவன் படம்... இயக்குனரின் லேட்டஸ்ட் அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரல் புகைப்படம் உள்ளே
சினிமா

வேகமெடுக்கும் ஜெயம் ரவியின் இறைவன் படம்... இயக்குனரின் லேட்டஸ்ட் அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரல் புகைப்படம் உள்ளே

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கரின் கலக்கல் காம்போவில் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... அட்டகாசமான வண்ணாரப்பேட்டையில பாடல் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயன் - அதிதி ஷங்கரின் கலக்கல் காம்போவில் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... அட்டகாசமான வண்ணாரப்பேட்டையில பாடல் இதோ!

'10-15 வருஷம் முன்னாடி நயன் அந்த படம் பண்ணிருந்தா..?'- வைரலாகும் பிரியா பவானி சங்கரின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'10-15 வருஷம் முன்னாடி நயன் அந்த படம் பண்ணிருந்தா..?'- வைரலாகும் பிரியா பவானி சங்கரின் ஸ்பெஷல் பேட்டி இதோ!