“கோவில் இடிச்சதும் படம் எடுக்கவே முடியல..” வீரன் உருவான விதம் குறித்து படக்குழு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரல் வீடியோ உள்ளே..

வீரன் கோவில் உருவான விதம் குறித்து படக்குழுவினர் வைரல் வீடியோ உள்ளே - Hiphop adhi Veeran temple making glimpse | Galatta

தமிழ் ரசிகர்களை தன் இசையின் மூலம் கட்டி இழுத்து துள்ள வைத்த ஹிப் ஹாப் ஆதி இயக்குனராகவும் நடிகராகவும் கவனம் பெற்று தற்போது தமிழி சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு படங்களை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘பி.டி சார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி கவனம் பெற்ற நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பட இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கி வருகிறார். பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளியான திரைப்படம் ‘வீரன்’ முதல் முறையாக நவீன சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவான வீரன் திரைப்படத்தினை காமெடி கதையில் வித்யாசமான அனுபவத்தை கொடுத்த ‘மரகத நாணயம்’ பட இயக்குனர் ARK சரவன் இயக்கியுள்ளார். சூப்பர் ஹீரோ வீரனாக ஹிப் ஹாப் ஆதி வித்யாசமான  தோற்றத்தில் மிரட்டியிருக்கும் வீரன் படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் கூட்டியது. அதன்படி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்பின் மத்தியில் கடந்த ஜூன் 2 ம் தேதி வெளியாகி தற்போது திரையரங்குகளில் வீரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், நக்கலைட்ஸ் சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் டிமேனன் ஒளிப்பதிவு செய்ய ஜிகே பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளியான பாடல்கள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கவனம் ஈர்க்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வீரன் திரைப்படம் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் வீரன் திரைப்படத்தில் மிக முக்கிய பங்காற்றிய வீரன் கோவில் உருவான விதம் குறித்து வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் தோட்ட உரிமையாளர், வீரன் சிலை செய்த சிற்பி மற்றும் இயக்குனர்கள் கோவில் உருவான விதம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் கோவில் இடிப்பது போன்ற காட்சி எடுக்கும் போது இடைவிடாத மழை பெய்து படப்பிடிப்பு நடைபெறாமல் போனது. அதனால் வேறு ஒரு இடத்தில் அதை படமாக்கம் செய்யப்பட்டது. வீரன் கோவில் வெறும் செட்டாக மட்டுமல்லாமல் அது ஒரு உண்மையிலே கோவிலாக பாவிக்கப்பட்டு வருகின்றது என இயக்குனர் இந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். உணர்வு பூர்வமான வீடியோவாக வெளியாகியிருக்கும் வீரன் கோவில் உருவான விதம் குறித்த வீடியோ தற்போது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..
சினிமா

ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..

சமய சண்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.. – படக்குழு வெளியிட்ட புது வீடியோ உள்ளே
சினிமா

சமய சண்டைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.. – படக்குழு வெளியிட்ட புது வீடியோ உள்ளே