வேகமெடுக்கும் ஜெயம் ரவியின் இறைவன் படம்... இயக்குனரின் லேட்டஸ்ட் அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரல் புகைப்படம் உள்ளே

ஜெயம் ரவியின் இறைவன் பட போஸ்ட்ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறது,jayam ravi in iraivan movie post production update by director i ahmed | Galatta

ஜெயம் ரவியின் அடுத்த ஸ்பெஷல் திரைப்படமாக வெளிவர இருக்கும் இறைவன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை இயக்குனர் I.அஹமத் பகிர்ந்து கொண்டார்.  தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் எல்லமே அனைத்து வயது ரசிகர்களும் குடும்பத்தோடு கொண்டாடும் வகையில் இருப்பது வழக்கம். அந்த வகையில் கடைசியாக சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக மிக சிறப்பாக நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். 

இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வரிசையாக வெளிவந்து மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. அதில் முதலாவதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சைரன் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் JR30 படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்க நட்டி, விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் JR32 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பதும் கூடுதல் தகவலாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இதனிடையே வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் இறைவன். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இறைவன் திரைப்படத்திற்கு ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். 

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிக்கும் இறைவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கும் இறைவன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான மொத்த பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறைவன் திரைப்படத்திற்கான லோகோ அனிமேஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் இயக்குனர் I.அஹமத் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடைபெறுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். எனவே இறைவன் திரைப்படத்தின் டீசர், பாடல்கள் குறித்த அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இயக்குனர் I.அஹமத்தின் அந்த பதிவு இதோ…
 

Post production..❤️ pic.twitter.com/OdocUs0nmt

— Director Ahmed (@Ahmed_filmmaker) June 13, 2023

'உங்க ஃபேவரட் பொம்மை எது?
சினிமா

'உங்க ஃபேவரட் பொம்மை எது?"- SJசூர்யாவின் பொம்மை பட நாயகி பிரியா பவானி சங்கரின் பதில் இதுதான்! வீடியோ உள்ளே

MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!
சினிமா

MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இதோ!

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் வந்த ஸ்பெஷல் ட்ரீட்... மாமன்னன் பட கொடி பறக்கிற காலம் பாடல் இதோ!
சினிமா

கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடனத்தில் வந்த ஸ்பெஷல் ட்ரீட்... மாமன்னன் பட கொடி பறக்கிற காலம் பாடல் இதோ!