ஜூன் ரேசில் இணைந்த SJசூர்யாவின் மிரட்டலான திரைப்படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

எஸ் ஜே சூர்யா வின் பொம்மை பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,sj suryah radha mohan in bommai movie release date announcement | Galatta

ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கென தனி பாணியில் மிகச் சிறப்பாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. முன்னதாக விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கலக்கி இருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது. 

இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் தயாரிக்க, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். பொம்மை திரைப்படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் வருகிற ஜூன் 16ஆம் தேதி பொம்மை திரைப்படம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஜூன் மாதத்தில் வரிசையாக அடுத்தடுத்து பல திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக இருக்கின்றன. அந்த வரிசையில் முதலாவதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் வீரன் திரைப்படமும், கொம்பன், விருமன் படங்களின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் முதல் முறை ஆர்யா நடித்திருக்கும் பக்கா கிராமத்து ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் இயக்குனர் சீனிவாசன் இயக்கத்தில் சண்டியர் பட நடிகர் ஜெகன் கதாநாயகனாக நடித்திருக்கும் துரிதம் ஆகிய திரைப்படங்கள் ஜூன் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஜூன் 9ம் தேதி நடிகர் சித்தார்த் நடிப்பில் ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் டக்கர், அசோக் செல்வன் சரத்குமார் இணைந்து நடித்த கிரைம் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் போர் தொழில் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 

அடுத்து ஜூன் 16ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் ராமாயண கதைக்களத்தில் தயாராகி இருக்கும் ஆதி புருஷ் திரைப்படமும், ஜூன் 23ஆம் தேதி இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் தண்டட்டி திரைப்படமும் ரிலீஸ் ஆகின்றன. இதுபோக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் மாமன்னன், இயக்குனர் சுந்தர்.சி-யின் தலைநகரம் 2 ஆகிய படங்களும் ஜூன் மாத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜூன் ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை திரைப்படமும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

#BOMMAI releasing world wide on JUNE16th 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 ⁦@thisisysr⁩ 🥰 ⁦⁦@priya_Bshankar⁩ 🥰 ⁦@Radhamohan_Dir⁩ 🥰 ⁦@Richardmnathan⁩ 🥰 ⁦@editoranthony⁩ 🥰 ⁦@KKadhirr_artdir⁩ 🥰 ⁦@kannan_kanal⁩ 🥰⁦@madhankarky⁩ 🥰 pic.twitter.com/6q3uQAT7wA

— S J Suryah (@iam_SJSuryah) June 1, 2023

தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே
சினிமா

தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!

முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!
சினிமா

முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!