உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் எத்தனை பாடல்கள்?- இசை வெளியீட்டிற்கு முன் முழு பட்டியலை வெளியிட்ட ARரஹ்மான்!

மாமன்னன் பட பாடல்களின் பட்டியலை வெளியிட்ட ARரஹ்மான்,ar rahman revealed full track list of maamannan mari selvaraj udhayanidhi stalin | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக படத்தின் முழு பாடல்களின் பட்டியலை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராகவும் தற்போது பதவி வகிக்கிப்பதால் நீண்ட நாட்களாகவே சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்திருந்தார். அதன்படி தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம் அவரது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தனக்கென தனி பாணியில் தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மிக அழுத்தமான முன்னணி கதாபாத்திரத்தில் வைகைப்புயல் வடிவேல் அவர்கள் நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகைப்புயல் வடிவேலு ஆகியோரோடு இணைந்து ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார்.  

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக இன்று ஜூன் ஒன்றாம் தேதி சென்னையில் உள்ள நேர் உள் விளையாட்டரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் அடுத்த சில நிமிடங்களில் இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த பிரம்மாண்டமான மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகைப்புயல் வடிவேலு பாடிய “ராசாக் கண்ணு” பாடல் வெளிவந்து ரசிகர்களின் மனதை உருக்கிய நிலையில், அடுத்த பாடலாக ஏ.ஆர்.ரகுமான் நடனமாடி வெளிவந்த “ஜிகு ஜிகு ரயிலு” பாடல் ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. இதனை அடுத்து அடுத்தடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக மாமன்னன் படத்தின் மொத்த பாடல்களின் பட்டியலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அதன்படி “கொடி பறக்குற காலம்” , “நெஞ்சமே நெஞ்சமே” , “உச்சந்தல” , “மன்னா மாமன்னா” , “வீரனே” , “ராசா கண்ணு” , “ஜிகு ஜிகு ரயிலு” என மாமன்னன் படத்தில் இருக்கும் ஏழு பாடல்கள் கொண்ட பட்டியலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு இருக்கிறார்.
 

#MAAMANNAN Audio Track list for today’s from 6 PM onwards  

 📍 Nehru Stadium#MAAMANNANliveconcert #Vadivelu @Udhaystalin
@KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouthpic.twitter.com/0Jw9w2AAdO

— A.R.Rahman (@arrahman) June 1, 2023

தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே
சினிமா

தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவிற்கு மாலை அணிவித்து பாராட்டிய அவரது மகன் ஜேசன் சஞ்சய்... காரணம் இதுதான்! ட்ரெண்டிங் வீடியோ உள்ளே

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!

முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!
சினிமா

முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!