"தியேட்டர்ல சந்திப்போம்!" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு... அட்டகாசமான SHOOTING SPOT GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு,super star rajinikanth jailer movie shoot wrapped nelson | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயலலிதா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருக்கிறது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தனது ஸ்டைலான நடிப்பால் வசீகரித்து, இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக, என்றென்றும் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக தனது திரை பயணத்தில் 170வது திரைப்படமாக நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொயதீன் பாய் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படையப்பா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன், நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும், ஜெயிலர் திரைப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சனின் வழக்கமான டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக ஜெயிலர் திரைப்படமும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் வெளிவந்த அறிவிப்பு டீசர் வீடியோ இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு நிறைவு செய்ததை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கடைசி நாள் படப்பிடிப்பை நிறைவு செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கேக் வெட்ட உடன் இயக்குனர் நெல்சன், தமன்னா உட்பட படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவை கொண்டாடும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு "தியேட்டர்ல சந்திப்போம்!" என குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

It's a wrap for #Jailer! Theatre la sandhippom 😍💥#JailerFromAug10@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 pic.twitter.com/Vhejuww4fg

— Sun Pictures (@sunpictures) June 1, 2023

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!
சினிமா

ஆர்யாவின் அதிரடியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... ட்ரெண்டாகும் ரொமான்டிக்கான புது ப்ரோமோ இதோ!

முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!
சினிமா

முக்கோண காதல் கதையாக வந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் தீராக் காதல்... ரசிகர்கள் மனம் கவர்ந்த புது GLIMPSE இதோ!

விறுவிறுப்பான கட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2... ஷூட்டிங் குறித்து முக்கிய பிரபலம் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

விறுவிறுப்பான கட்டத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் - ஷங்கரின் இந்தியன் 2... ஷூட்டிங் குறித்து முக்கிய பிரபலம் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!