சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 இறுதியில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கனா.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சத்யராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்தார்.இந்த படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பல பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வந்தனர்.வசூல் ரீதியாகவும்,விமர்சகர்களிடமும் இந்த நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

தெலுங்கிலும் இந்த டப் செய்து வெளியிடப்பட்டு பெரிய வரவேற்பை பெற்று குறிப்பிடத்தக்கது.இந்த படம் இன்று சீனாவில் வெளியாகிறது.சில இந்திய படங்களே சீனாவில் வெளியாகியுள்ள நிலையில் இது மிகப்பெரும் கௌரவமாக கருதப்படுகிறது.2.0 படத்தை தொடர்ந்து சீனாவில் வெளியாகும் 2ஆவது என்ற பெருமையையும் கனா பெற்றுள்ளது.

இன்று சீனாவின் கனா படம் வெளியாவது குறித்து முக்கிய படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியையும்,எதிர்பரப்பையும் வெளிப்படுத்தி ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.தமிழ்.தெலுங்கில் செம ஹிட் அடித்த கனா திரைப்படம் சீனாவிலும் சூப்பர்ஹிட் அடிக்க கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.