தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஸ்ரீ  வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் SK 20 படத்தில் நடிக்கிறார்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகா நடைபெற்று வருகிறது.விரைவில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று தெரிகிறது.இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.தற்போது இந்த படத்தின் நாயகி மரியா படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

sivakarthikeyan sk 20 movie heroine maria ryaboshapka birthday celebration photo