நேற்று லியோ பட நா ரெடி அப்டேட்... இன்று மாணவர்கள் முன் அரசியல் பேச்சு, அட்வைஸ்... விஜயின் மாஸ்டர் பிளான் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ

மாணவர்கள் முன் அரசியல் பேசிய தளபதி விஜயின் வீடியோ,thalapathy vijay political speech in front of tenth twelfth students | Galatta

நேற்று ஜூன் 16ஆம் தேதி தளபதி விஜயின் லியோ படத்திலிருந்து முதல் பாடலான “நா ரெடி” எனும் பாடல் அவரது பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்ததை தொடர்ந்து இன்று ஜூன் 17ஆம் தேதி சென்னையில் உள்ள நீலாங்கரையில் இருக்கும் ஆர்.கே. கன்வென்ஷன் சென்ட்ரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் மாணவர்கள் முன் அரசியல் பேச்சு அட்வைஸ் என தனது ஸ்டைலில் பேசியிருக்கிறார் தளபதி விஜய். தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு சமூக நல செயல்களை செய்து வரும் தளபதி விஜய் விரைவில் தமிழ் நாடு அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது. 

தொடர்ந்து தனது மக்கள் இயக்கத்தின் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த தளபதி விஜய், சமீபத்தில் உலக பட்டினி தினத்தன்று தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் பசியால் வாடும் பல லட்சம் மக்களின் பசியை மக்கள் இயக்கத்தினர் போக்கினர். இந்த நிகழ்வு “அனைத்து மாவட்டங்கள்” என குறிப்பிடப்படாமல் 234 தொகுதிகளில் என குறிப்பிடப்பட்டு நடைபெற்றது விஜயின் அரசியல் வருகை குறித்து அனைவரின் கவனத்தையும் திருப்பியது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்று தற்போது முக்கிய பதவிகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க தளபதி விஜய் முடிவு எடுத்தார். அதிலும் கூட மாவட்ட வாரியாக இல்லாமல் 234 தொகுதிகள் வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு தற்போது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவும் விஜயின் அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்ததால் பல்வேறு விவாதங்களும் இது குறித்து நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது சாதித்த மாணவ மாணவிகளை அவர்கள் பெற்றோர்களோடு மேடை ஏற்றி கௌரவப்படுத்தி ஊக்கத்தொகை வழங்கி வரும் தளபதி விஜய் அவர்கள் முன் பேசியபோது சில அறிவுரைகளை பகிர்ந்து கொண்டார். ரசிகர்கள் முன்பும் மாணவர்கள் முன்பும் அறிவுரைகளை பகிர்வது என்பது வழக்கம் தான் ஆனால் இந்த முறை வழக்கத்தை விட இன்னும் ஒரு படி முன் வந்து பேசிய தளபதி விஜய் மாணவர்களை அடுத்து வரக்கூடிய முதல் வாக்காளர்கள் என குறிப்பிட்டு கொஞ்சம் அரசியலும் பேசியிருக்கிறார். 

அப்படி பேசுகையில், "முடிந்த வரைக்கும் படியுங்கள் எல்லா தலைவரைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் அம்பேத்கர் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பெரியார் அவர்களைப் பற்றி தெரிநது கொள்ளுங்கள், காமராஜர் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவைகளை விட்டுவிடுங்கள். நிறைய பேர் ஒன்று சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன் உன் நண்பன் பற்றி சொல் நீ யார் என்று சொல்கிறேன் என சொல்வார்கள் அதெல்லாம் இப்போது மாறிவிட்டது என நினைக்கிறேன் நீ எந்த சோசியல் மீடியா பக்கத்தை பின்தொடர்கிறாய் என்று சொல் நான் உன்னை பற்றி சொல்கிறேன் என்பது தான் இன்றைய ஒரு புதிய பழமொழி. இப்போது அடுத்து நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க போகிறீர்கள். ஆனால் பாருங்கள் நம் விரலை வைத்து நம் கண்களையே குத்துவது என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது அதை தான் இப்போது நாமும் செய்து கொண்டிருக்கிறோம். அது தான் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது. ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். ஒரு ஓட்டிற்கு ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு தொகுதியில் ஒரு ஒன்றரை லட்சம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் ஒரு 15 கோடி ரூபாய் ஆகிவிட்டதா? ஒருவர் வந்து 15 கோடி ரூபாய் செலவழிக்கிறார் என்றார் அவர் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். சும்மா யோசித்துப் பாருங்கள்... இதெல்லாம் உங்களுடைய பாடத்திட்டத்தின் வழியாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன். ஒன்றுமில்லை தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் அவருடைய அப்பா அம்மாவிடம் போய் இனிமேல் காசு வாங்காமல் ஓட்டு போடுங்கள் என சொல்லிப் பாருங்கள். சும்மா முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னீர்கள் என்றால் கண்டிப்பாக அது நடக்கும் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் தான் அடுத்தடுத்த வருடங்களில் முதல் முறை வாக்களிப்பவர்களாக வர போகிறீர்கள். இதை நான் ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் இது எப்போது நடக்கிறதோ அப்போது தான் உங்களுடைய கல்வி முறையே முழுமை அடைந்ததாக நான் நினைக்கிறேன்.”

என தளபதி விஜய் பேசியிருக்கிறார். இது தவிர இன்னும் பல முக்கியமான விஷயங்கள் குறித்து தளபதி விஜய் பேசியிருக்கும் இந்த முழு நிகழ்ச்சியின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மிரள வைக்கும் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு - ஃபகத் பாசலின் நடிப்பு... மாமன்னன் பட மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

சினிமா

"நா ரெடி"- தளபதி விஜயின் பிறந்தநாள் ட்ரீட்டாக வரும் லியோ பட முதல் பாடல்... பக்கா மாஸ் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமா

"தியேட்டருக்குள் புகுந்த குரங்கு!"- ஆதிபுரூஷ் படம் பார்க்க ஆஞ்சநேயர் வந்ததாக கொண்டாடிய ரசிகர்கள்! வைரல் வீடியோ