ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!

சூர்யாவின் கங்குவா பட GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் வெளியீடு,suriya in kanguva movie glimpse audio song out now | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நாயகரான நடிகர் சூர்யாவின் அடுத்த அதிரடியான பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் கங்குவா படத்தின் ஸ்பெஷல் பரிசாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா முன்னதாக தனது நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருதுகளை வென்று குவித்த சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தில் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். 

அடுத்ததாக முதல்முறையாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்ற நிலையில் , விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனது திரை பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக தற்போது சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா திரைப்படம் நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் உருவாகும் கங்குவா திரைப்படத்தை UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிற கங்குவா திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 

மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.  ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் K.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோவை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக ஜூலை 23ம் தேதி சரியாக 12.01 மணிக்கு வெளிவந்தது. 

இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் ரசிகர் ஒருவர், “ஐயா அப்படியே GLIMPSEல வர பாடலை Spotify, Instagram எல்லாத்துலயும் சவுண்ட் எஃபக்ட்ஸ் இல்லாம போடுங்கய்யா..” ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்த்திடம் என கேட்க , "ON THE WAY!" என ஸ்டூடியோ கிரீன் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. அதன்படியே தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த GLIMPSE of கங்குவா ஆடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த GLIMPSE of கங்குவா ஆடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம் .
 

Here you go. Just as we promised🔥

Listen to the roaring #GlimpseOfKanguva Music on your favourite streaming platforms 🎶

🔗 https://t.co/Xmk7KEIUgv @Suriya_offl @DishPatani @directorsiva @ThisIsDSP @kegvraja @UV_Creations @saregamasouth @KvnProductions @KanguvaTheMoviepic.twitter.com/7m8cVThrLu

— Studio Green (@StudioGreen2) July 26, 2023

தனுஷ் பிறந்தநாளை அதிரடியாக ஆரம்பிக்க கேப்டன் மில்லர் படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு... மிரட்டலான புதிய போஸ்டர் இதோ!
சினிமா

தனுஷ் பிறந்தநாளை அதிரடியாக ஆரம்பிக்க கேப்டன் மில்லர் படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு... மிரட்டலான புதிய போஸ்டர் இதோ!

“தமிழ் சினிமா வரலாற்றிலேயே சூர்யாவின் ACTION PACKED கங்குவா GLIMPSE தான் முதல் முறை…!”- அப்படி என்ன ஸ்பெஷல்? - விவரம் உள்ளே
சினிமா

“தமிழ் சினிமா வரலாற்றிலேயே சூர்யாவின் ACTION PACKED கங்குவா GLIMPSE தான் முதல் முறை…!”- அப்படி என்ன ஸ்பெஷல்? - விவரம் உள்ளே

ரிலீஸுக்கு ரெடியான MSதோனி தயாரிப்பின் முதல் தமிழ் படைப்புஏ... ஹரிஷ் கல்யாணின் LGM பட சென்சார் அறிக்கை இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான MSதோனி தயாரிப்பின் முதல் தமிழ் படைப்புஏ... ஹரிஷ் கல்யாணின் LGM பட சென்சார் அறிக்கை இதோ!