சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் ட்ரீட்டாக வரும் அயலான் பட டீசர் வெளியாகும் நேரத்தை அறிவித்த படக்குழு!

சிவகார்த்திகேயனின் அயலான் பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு,Sivakarthikeyan in ayalaan movie teaser release time announcement | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் நேரம் தற்போது அறிவிக்கப்பட்டது. தனக்கே உரித்தான ஸ்டைலில் கலக்கலாக காமெடியில் கலக்கி கலக்கப்போவது யாரு காம்பியரிங் என தொலைக்காட்சி வாயிலாக மக்கள் மனதை கவர்ந்து பின்னர் நடிகராக சினிமாவுக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையும் பெற்றது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பெரிய படங்களாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அந்த வகையில் மாவீரன் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது உலகநாயகன் கமஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது.  இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படமாக உருவாகும் SK23 படத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமான ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக தயாராகி வருகிறது அயலான் திரைப்படம். இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ள அயலான் திரைப்படத்தில், இஷா கோபிகர், சரத் கேல்கர், பானுப்பிரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அயலான் திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே அயலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் மட்டும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன அதற்கு மிக முக்கிய காரணம் படத்தில் இருக்கும் VFX. இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அட்டகாசமான ஏலியன் திரைப்படமாக அயலான் படத்தை கொடுக்க முடிவு செய்த படக்குழுவினர் அதற்கான VFX பணிகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டு  தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட அயலான் பட இறுதி கட்டப் பணிகள் இன்னும் முழுவதும் நிறைவடையாததால் தரமான படைப்பாக அயலான் படத்தை வழங்க முடிவு செய்த படக்குழுவினர் அடுத்த 2024 ஆம் ஆண்டில் பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என தெரிவித்தனர். மேலும் பொங்கல் விருந்தாக வர இருக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வர இருப்பதாகவும் அறிவித்து ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்தனர். சொன்னபடியே நாளை அக்டோபர் 6ம் தேதி சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளிவர இருக்கும் நிலையில் நாளை மாலை 7 மணி அளவில் டீசர் வெளியாகும் என டீசர் வெளியாகும் நேரத்தையும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

The much-awaited teaser of our otherworldly neighbour, #Ayalaan is all set to release tomorrow at 7️⃣:0️⃣8️⃣ PM#AyalaanTamilTeaser on @SunTV YouTube Channel🔥#AyalaanTeluguTeaser on @sonymusicsouth YouTube Channel✨

Stay tuned for the show 🎆#AyalaanTeaserFromOct6pic.twitter.com/F96suWUi72

— KJR Studios (@kjr_studios) October 5, 2023