தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் ரிலீஸை முன்னிட்டு வந்த அதிரடி ட்ரீட்... ஆக்சன் கிங் அர்ஜுனனின் மிரட்டலான புது போஸ்டர் இதோ!

தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் ஸ்பெஷல் போஸ்டர்,thalapathy vijay in leo movie trailer release special poster | Galatta

நாளுக்கு நாள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் அதிரடியான லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை அக்டோபர் 5ம் தேதி வெளிவர இருக்கும் நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் இந்த 2023 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்த்த திரைப்படங்களில் ஒன்றாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறை தளபதி விஜய் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து இருக்கும் இந்த லியோ திரைப்படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என்பதாலும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி வரை வசூலித்ததாலும், கைதி & விக்ரம் ஆகிய படங்களை கொண்ட லோகேஷ் கனகராஜின் LCU ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாலும் தற்போது லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

அதுமட்டுமின்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் உடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதும் விக்ரம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வந்தது போலவே இந்த லியோ பாடத்திலும் சர்ப்ரைசாக ஏதாவது பெரிய நட்சத்திரம் நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடும் என்பதும் இப்படத்தின் மீது இன்னும் ஆர்வத்தை கூட்டி இருக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களின் அதிரடி ஆக்ஷனில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில் வெளிவரும் லியோ படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் மேயாத மான், ஆடை, குளுகுளு படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் நடைபெற இருந்த லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இதனிடையே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் நாளை அக்டோபர் 5ம் தேதி மாலை சன் டிவியின் Youtube சேனலில் வெளிவர உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் நேற்று நடிகர் சஞ்சய் தத்தின் அதிரடி போஸ்டர் ஒன்றை வெளியிட்ட சன் டிவி நிறுவனம் தற்போது லியோ படத்திலிருந்து ஆக்சன் கிங் அர்ஜுனனின் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த புதிய போஸ்டர் இதோ…
 

Leo Das is on his way to meet y'all!
1 day to go for #LEO trailer https://t.co/1lU7vCb2go@actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #LeoTrailer pic.twitter.com/bPFyuLZ2BI

— Sun TV (@SunTV) October 4, 2023