"கத்தி முனையில் த்ரிஷா!"- தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ட்ரெய்லர் ரிலீஸ் தினத்தில் வந்த மிரட்டலான சர்ப்ரைஸ் போஸ்டர் இதோ!

தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் ரிலீஸ் முன்னிட்டு திரிஷாவின் புது போஸ்டர்,thalapathy vijay in leo movie trailer special poster of trisha | Galatta

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அக்டோபர் 5ம் தேதி வெளிவர இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸை முன்னிட்டு படத்தில் இருந்து நடிகை திரிஷாவின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.  இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது தளபதி விஜயின் லியோ திரைப்படம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜயின் ஒவ்வொரு திரைப்படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தொடர்ந்து பிளாக் பாஸ்டர் ஹிட்டாகி வருகின்றன. அந்த வரிசையில் லியோ திரைப்படம் தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக திரைப்படத்தை உலக அளவில் இதுவரை தென்னிந்திய சினிமாவிலேயே எந்த படமும் ரிலீஸ் செய்திடாத  வகையில் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் திட்டங்களை பட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து இமாலய வெற்றி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் நடிகை திரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வரும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார்.

இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று அக்டோபர் 5ம் தேதி வெளிவருகிறது. கைதி மற்றும் விக்ரம் படங்களை கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU என்ற யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ படமும் இடம்பெருமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர் இவை அனைத்திற்கும் பதில் இன்று வெளியாகும் ட்ரெய்லரில் கிடைக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை வெளிவர இருக்கும் தளபதி விஜயின் லியோ பட ட்ரெய்லர் சன் டிவியின் Youtube சேனலில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ட்ரெய்லர் வெளி வருவதற்கு முன்பாக ஸ்பெஷலான புதிய போஸ்டர் ஒன்று வெளிவந்துள்ளது. முதல்முறையாக நடிகை திரிஷாவின் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. கத்தி முனையில் நடிகை திரிஷா நிற்கக்கூடிய ஒரு மிரட்டலான போஸ்டர் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

The most-awaited @trishtrashers from #Leo💥#LeoTrailer is releasing Today 💥@actorvijay @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #LeoTrailer pic.twitter.com/0jjrbMKjH0

— Sun TV (@SunTV) October 5, 2023