திரிஷாவின் லியோ பட புது போஸ்டருக்கு வசனகர்த்தா ரத்னகுமாரின் ரியாக்ஷனில் சுவாரஸ்யமான ஹிண்ட்... தளபதி விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

திரிஷாவின் லியோ பட புது போஸ்டருக்கு வசனகர்த்தா ரத்னகுமாரின் ரியாக்ஷன்,dialogue writer reaction on trisha new poster from leo movie | Galatta

இன்று அக்டோபர் 5ம் தேதி லியோ திரைப்படத்திலிருந்து நடிகை திரிஷாவின் புதிய போஸ்டர் வெளிவந்த நிலையில் அது குறித்து படத்தின் வசனகர்த்தாவான ரத்னகுமார் பதிவிட்டு இருக்கும் ஒரு பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது படமாக தயாராகி இருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீசாகிறது முன்னதாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று அக்டோபர் ஐந்தாம் தேதி வெளிவர இருக்கிறது. ஏற்கனவே திரைப்படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததாலும் கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலித்ததாலும் தளபதி விஜயின் 67வது திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், இப்படம் LCUல் இடம்பெருமா என்றும் அதற்கான விஷயங்கள் இந்த ட்ரெய்லரில் இடம் பெறுமா என்றும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்துள்ள நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்த லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வரும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார்.

லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க ஆண்டனி தாஸ் மற்றும் ஹெரால்ட் தாஸ் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இருவரும் நடித்திருக்கின்றனர். மிகப்பிரம்மாண்டமாக லியோ திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்மரமாக பணியாற்றி வருகின்றனர். லியோ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே இன்று ட்ரெய்லர் வெளி வருவதை அறிவிக்கும் வகையில் நடிகை திரிஷாவின் புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டது. இந்த நிலையில் இந்த போஸ்டரை குறிப்பிட்டு பாடத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கும் பிரபல இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் அந்தப் போஸ்டரை பதிவிட்டு “பயமுறுத்தக்கூடிய ஒரு வேட்டைக்காரரை பார்க்கும்போது சண்டையிட வேண்டும் இல்லை பறந்து செல்ல வேண்டும்" என பதிவிட்டு இருக்கிறார். கத்தி முனையில் திரிஷா இருப்பது போல் இருக்கும் இந்த போஸ்டரை குறிப்பிட்டு இவ்வாறு ரத்னகுமார் பதிவிட்டு இருப்பதால், அந்த கத்தியை பிடித்திருக்கும் நபர் யாராக இருக்கக்கூடும் அது என்ன மாதிரியான ஒரு சண்டைக் காட்சியாக இருக்கக்கூடும் என்பது போல பலவிதமான சுவாரசியங்களை தூண்டும் வகையில் அவர் பதிவிட்டு இருப்பதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து அதை பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் ரத்னகுமார் அவர்களின் அந்த பதிவு இதோ…
trisha in the road movie sneak peek video out now