அதிரடி சம்பவம் செய்த லோகேஷ் கனகராஜின் லியோ பட சென்சார் ஓவர்... உற்சாகத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

தளபதி விஜயின் லியோ பட சென்சார் விவரம் வெளியீடு,thalapathy vijay in leo movie censored with ua | Galatta

ரிலீசுக்கு ரெடியாகி வரும் தளபதி விஜயின் அதிரடி ஆக்சன் படமான லியோ திரைப்படத்தின் சென்சார் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. இதுவரை தளபதி விஜய் அவர்களின் திரைப்பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்தை வெளியிட பட குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர் அதன்படி இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் லியோ திரைப்படத்தின் டிக்கெட்டுகள் முன்பதிவு ரிலீசுக்கு சில வாரங்கள் முன்பே தொடங்கப்பட்டதால் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளும் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. 

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் இத்திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் உருவாக்கிய LCU-வில் இடம்பெறும் பட்சத்தில் விக்ரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸில்ல் நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியது போல மற்றொரு மிரட்டலான கதாபாத்திரத்தில் முன்னணி நட்சத்திரம் நடிகர்கள் யாரேனும் நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை LCU இல்லாவிட்டாலும் சர்ப்ரைஸ் கட்டாயம் இருக்கும் என்பதும் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வரும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார். ஆரம்பம் முதலே அதிரடியான ஆக்சன் பிளாக் படமாக லியோ படம் இருக்கும் என பேசப்படும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த போஸ்டரிலும் இடம்பெற்ற கழுதைப்புலியின் சண்டைக்காட்சி மிகவும் பிரமிக்க வைக்கும் வகையில் மிரட்டலாக இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன. இதற்காகவே மிகவும் பிரத்தியேகமாக VFX பணிகளில் பட குழுவினர் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. முன்னதாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தளபதி விஜயின் லியோ படத்தின் அதிரடியான ட்ரெய்லர் நாளை அக்டோபர் 5ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் சென்சார் குறித்த அறிக்கையும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. ACTION PACKED படமாக வர இருக்கும் தளபதி விஜயின் லியோ படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ...
 

#LEO CENSORED U/A 🔥 pic.twitter.com/FtNdFd0AYV

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 4, 2023