லியோ ரிலீஸுக்கு முன் வரும் திரிஷாவின் அதிரடியான தி ரோட்... ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விறுவிறுப்பான SNEAK PEEK வீடியோ இதோ!

திரிஷாவின் தி ரோட் பட SNEAK PEEK வீடியோ வெளியீடு,trisha in the road movie sneak peek video out now | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் தி ரோட் திரைப்படத்திலிருந்து SNEAK PEEK வீடியோ வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக தொடர்ந்து அட்டகாசமான படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷா கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களிலும் இதய ராணியாகவே சிம்மாசனம் இட்டு வசீகரித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து தனது திரைப்படங்களால் ரசிகர்களை மகிழ்விக்க இருக்கும் திரிஷா நடிப்பில் அட்டகாசமான படங்கள் வரிசையாக தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் முதல் முறையாக வெப் சீரிஸில் களம் இறங்கி இருக்கும் நடிகை திரிஷா நடிப்பில் பிருந்தா என்னும் வெப் சீரிஸ் தெலுங்கு மொழியில் தயாராகி பிற மொழிகளில் வெளிவர ரெடியாகி வருகிறது. காவல்துறை அதிகாரியாக த்ரிஷா நடித்திருக்கும் இந்த பிருந்தா வெப் சீரிஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் வெளிவர உள்ளது. முன்னதாக நடிகர் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்திருக்கும் சதுரங்க வேட்டை - 2 திரைப்படம் நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் ராம் பார்ட் 1 திரைப்படத்தில் திரிஷா தற்போது நடித்து வருகிறார். இந்த வரிசையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமான லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று அக்டோபர் 5ம் தேதி வெளிவர இருக்கிறது. 

இதனிடையே லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் மற்றொரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக தி ரோட் படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தி ரோட் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஷபீர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் பிரபல நடிகருமான சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, நேகா ஷஹின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி ரோட் திரைப்படத்தில் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நாளை அக்டோபர் 6ம் தேதி தி ரோட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு முன்பாக தி ரோட் திரைப்படத்திலிருந்து விறுவிறுப்பான SNEAK PEEK வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த விறுவிறுப்பான SNEAK PEEK வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.