தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லை.

உடல் பருமனாக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த STR அல்டிமேட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி பழைய நிலைக்கு திரும்பினார்.இவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தினை கெளதம் மேனன் இயக்குகிறார்.இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ராதிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.சித்தி இத்நானி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

நீரஜ் மாதவ்,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மொத்தமாக பிரபல விநியோக நிறுவனமான United India Exporters நிறுவனம் கைப்பற்றியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.