தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.திருச்சிற்றம்பலம் படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவற்றை அடுத்து தனுஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை ராக்கி,சாணிக்காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பீரியட் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகவுள்ளது.2023 கோடை விடுமுறைக்கு இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் வீடீயோவை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.