தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படங்கள் எடுத்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர்.கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வந்தார் ஷங்கர்.இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரன்வீர் கபூர் நடிப்பில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க தயாராகி வருகிறார்.இதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் தயாராகி வரும் RC 15 படத்தில் நடிக்கிறார்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Sri Venkateswara Creations இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று பல மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார்.எஸ் ஜே சூர்யா,அஞ்சலி,ஸ்ரீகாந்த்,ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது புது ஹேர்ஸ்டைலில் ராம்சரண் இருப்பது போல ஒரு வீடீயோவை அவரது ஹேர்ஸ்டைலிஸ்ட் பதிவிட்டுள்ளார்.செம ஸ்மார்ட்டாக ராம்சரண் இருக்கும் இந்த கெட்டப் கண்டிப்பாக ஷங்கர்-ராம்சரண் படத்திற்காக தான் இருக்கும் என ரசிகர்கள் உறுதியுடன் உள்ளனர்.ட்ரெண்ட் ஆகும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்