மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் சல்யூட் படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.

அடுத்ததாக சில முக்கிய படங்கள் மற்றும் நெட்பிலிக்ஸ் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.துல்கர் சல்மான் வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் சீதா ராமம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மிருணாள் தாகூர் துல்கருக்கு ஜோடியாக ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார்.ராஷ்மிகா மந்தனா மற்றொரு ஹீரோயினாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஹனு ராகவபுடி இந்த படத்தினை இயக்கியுள்ளார்.விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் ஜூலை 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த பாடலின் ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.