நடிகர் சிலம்பரசன் பற்றிய செய்திகள் வந்தால், அன்றைய நாள் முழுவதும் அச்செய்தியே டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும். அந்த அளவிற்கு ரசிகர்கள் விரும்பும் நாயகனாக உருவெடுத்துள்ளார். நடிகர் சிலம்பரசன் தனது உடலை எடையை குறைத்து பழைய சிம்புவாக வந்து நின்றதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இருந்தது. 

சிம்பு நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் ஒருபுறம், சிம்புவின் போட்டோஷூட்டுகள் மறுபுறம் என ரசிகர்களை ஈர்த்து வருகிறது சிலம்பரசனின் வேகம். சமீபத்தில் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் டைட்டில் லுக் வெளியானது. தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் இந்த போஸ்டரை வெளியிட்டனர். இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்த படத்தில் பத்து தல ராவணன் என்பதற்கேற்ப சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என்று கூறப்படுகிறது. ஜனவரியில் பத்து தல படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து பொங்கல் ரிலீஸுக்கு காத்திருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை 7G பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது என்றும், ஓவர்சீஸ் உரிமையை AP இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அப்டேட்டை சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் மாதவ் மீடியா கூறியிருந்தது. 

ஈஸ்வரன் படத்தை முடித்த கையோடு வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் களமிறங்கினார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை அணிந்தார். இந்த நிலையில் தற்போது அவர் இருமுடி கட்டிக் கொண்டு சபரிமலைக்கு கிளம்பியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வருடமும் சபரிமலைக்கு சென்று வந்தவுடன் உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலம்பரசனின் இந்த வேகத்தை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த 2021-ம் ஆண்டு அவருக்கு சிறப்பாக அமையும் எனவும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.