தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணியான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்-சிலம்பரசன்.TR-இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் வெற்றிப்பயணத்தில் 3-வது திரைப்படமாக தயாராகியிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேசன் அபனவர்கள் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்துள்ளார்.

சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய நடித்துள்ளனர். சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 

பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினராக தற்போது அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிலம்பரசன்.TR சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த நிலையில் தற்போது சிலம்பரசன்.TR-ன் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு உலகநாயகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தயாரிப்பாளர் ஐசரி.K.கணேஷ் அவர்கள் உலகநாயகன் அவர்களை நேரில் சந்தித்து வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை ஐசரி.K.கணேஷ் அவர்கள் நேரில் சந்தித்த புகைப்படம் இதோ... 
 

Producer Dr @IshariKGanesh met Ulaganayagan @ikamalhaasan Sir and invited him for @SilambarasanTR_ @menongautham #VendhuThanindhathuKaadu’s Grand Audio Launch going to happen on Sep 2nd !

An @arrahman Musical

Prod by @VelsFilmIntl
A @RedGiantMovies_ Release@Udhaystalin pic.twitter.com/Ja9S04tK7I

— Vels Film International (@VelsFilmIntl) August 30, 2022