தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த திரைப்படம் லைகர். குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்தில், பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார்.விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார்.

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்த லைகர் திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகியது.தமிழில் ஆர் கே சுரேஷ் அவர்களின் ஸ்டூடியோ 9 புரொடக்ஷன் நிறுவனம் லைகர் படத்தை வெளியிட கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் லைகர் திரைப்படம் ரிலீஸானது. 

பிரம்மாண்டமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான லைகர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் லைகர் திரைப்படத்திலிருந்து ரொமான்டிக்கான என் வானத்தில் வந்த வீடியோ பாடல் தற்போது வெளியானது. அந்த வீடியோ பாடல் இதோ…