வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து பத்துதல படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து மாநாடு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் STR.இதனை தொடர்ந்து பத்து தல,கெளதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

இவரது மாநாடு படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வந்தார் சிம்பு.இந்த படத்தின் இறுதிக்கட்ட சில நாட்கள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது என்று வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கில் இருந்து சில புகைப்படங்களை தற்போது சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார்.அதோடு தான் பார்த்தவரை இந்த படம் சிம்புவிற்கும் இய்குனார் வெங்கட் பிரபுவிற்கும் அவர்கள் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.