“நீங்க இல்லாமல் நான் இல்லை” ரசிகர்களுக்கு சிலம்பரசன் கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ இதோ..

ரசிகர்களுக்கு சிலம்பரசன் கொடுத்த சர்ப்ரைஸ் - Silambarasan loving message to his fans | Galatta

தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகவிருக்கும் மிக முக்கியமான திரைப்படம் சிலம்பரசன் TR  நடித்த ‘பத்து தல’. இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் மார்ச் 30 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான முன்பதிவு மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி கதைகளத்தில் உருவான இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் கௌதம்,கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாசலம், கலையரசன், சென்றாயன் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக வெளியான பத்து தல படத்தின் டிரைலர் மக்களின் ஆர்வத்தை மிகப்பெரிய அளவு உயர்த்தியது., சிலம்பரசனின் முந்தைய படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மிகப்பெரிய ஹிட் க்கு பின் அடுத்தாக வெளியாகும் இந்த படமும் மிகப்பெரிய அளவு ஹிட் அடிக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது ரசிகர்களுக்கான சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,  

"படத்திற்கு நல்ல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு.. பெரிய ஓபனிங்க் இருக்குனு சொல்றாங்க.. ஆனா இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் நான் கிடையாது. என்னுடைய முந்தைய படம் ஹிட் என்பதால் கிடையாது. நீங்க கொடுத்த ஆதரவு. அதை என்னிக்கும் நான் மறக்கவே மாட்டேன்.இன்னிக்கு இவ்ளோ பெரிய ரிலீஸ் வருது. ஒரு ஆதரவு இருக்குனா அதுக்கு முழு காரணம் நீங்க தான். அதுக்கு நான் எத்தனை தடவ நன்றி சொன்னாலும் அது எனக்கு எப்படினு சொல்ல தெரியல.. நன்றி..  கண்டிப்பா திரையரங்குகளுக்கு வந்து படத்தை பாருங்க. குடும்பத்தோடு பார்த்து என்ஜாய் பண்ணுங்க. படம் ரொம்ப நல்லா வந்துருக்கு.‌ கிருஷ்ணா ரொம்ப நல்லா படம் கொடுத்துருக்காரு. ரகுமான் சார் இசையை பற்றி நான் சொல்லவே தேவையில்லை நீங்க எல்லோரும் நல்ல வரவேற்பு கொடுத்துட்டு வரீங்க.. கண்டிப்பா இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமா வரணும்னு  எல்லாம் வல்ல இறைவன வேண்டிக்கொள்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் கண்டிப்பா எங்களுக்கு தேவை" என்றார் சிலம்பரசன். 

 

#PathuThala #STR 's loving message to all Tamil people👌#PathuThalaFromTomorrow

Thank you @SilambarasanTR_ ji @Gautham_Karthik @StudioGreen2 @PenMovies @arrahman @nameis_krishna @priya_Bshankar @NehaGnanavel @Dhananjayang @MangoMassMedia @homescreenent @SonyMusicSouth 💐😇🔥 pic.twitter.com/reHXgHByIZ

— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) March 29, 2023

சிலம்பரசனின் பத்து தல படத்தில் 9 காட்சிகளில் கைவைத்த சென்சார் குழு.. - வைரலாகும் சான்றிதழ்.. விவரம் இதோ..
சினிமா

சிலம்பரசனின் பத்து தல படத்தில் 9 காட்சிகளில் கைவைத்த சென்சார் குழு.. - வைரலாகும் சான்றிதழ்.. விவரம் இதோ..

வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? - Mute போட்ட தணிக்கை குழு.. விவரம் இதோ..
சினிமா

வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? - Mute போட்ட தணிக்கை குழு.. விவரம் இதோ..

‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..
சினிமா

‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..