‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..

AK 62  படம் அப்டேட்டை அறிவித்த படக்குழு -  Ak 62 exclusive update goes viral | Galatta

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆப்ஸ்களை படங்களுக்கு படங்கள் மூலம் வேட்டையாடும் ஜாம்பவனாக இருப்பவர் அஜித் குமார். தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற இவர் தொடர்ந்து அட்டகாசமான படங்களை கொடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வந்த திரைப்படம் ‘துணிவு’ எச் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறை இணைந்த அஜித் குமார் அட்டகாசமான திரைக்கதையுடன் வங்கி கொள்ளை மையப்படுத்தி சுவாரஸ்யமான திரைப்படத்தை கொடுத்தார். ரசிகர்களின் பேராதரவோடு வெளியான துணிவு திரைப்படம் உலகளவில் வசூல்களை குவித்து கவனம் பெற்றது.

இந்நிலையில் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டே அஜித் குமாரின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் குமாரின் 62 வது திரைப்படத்தை இயக்க போவதாக அதிகாரப் பூர்வ அறிக்கை வெளியானது. இதனையடுத்து உற்சாகத்துடன் இருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பினை கொண்டாடி வரவேற்றனர். பின் துணிவு திரைப்படம் வெளியாகி மாதங்கள் கடந்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்தும் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்தும் AK62 படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. மேலும் இணையத்தில் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதில்லை என்றும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியானது. இது ஒருபுறம் தீயாய் பரவ இருந்தும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்தவொரு அறிக்கையும் வராமல் இருந்தது.

இந்நிலையில் லைகா குழுமம் சார்பில் தமிழ் குமரன் அவர்கள் தனியார் நிறுவனத்தின் திறப்பு விழாவில் சென்றிருக்கும்போது பத்திரிக்கையாளரை சந்தித்த அவரிடம் அஜித் குமாரின் AK62 படம் குறித்து கேட்கையில் அவர் கண்டிப்பா அடுத்த மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

லைகா நிறுவனம் தமிழில் மிக பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும் தளபதி விஜய் நடிப்பில் கத்தி திரைப் படம் தொடங்கி ரஜினிகாந்த் 2.0 மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை லைகா தமிழ் சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளை தந்து திரையுலகில் அசைக்க முடியாத தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வருகிறது. ஒருபுறம் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களை தயாரித்தாலும் அதே நேரத்தில் சிறு பட்ஜெட் படங்களையும் தயாரித்து கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

“எனக்கு ஏன் இப்படி?.. நான் என்ன செஞ்சாலும் போகமாட்டேங்குது.” மனமுடைந்து பேசிய சமந்தா – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“எனக்கு ஏன் இப்படி?.. நான் என்ன செஞ்சாலும் போகமாட்டேங்குது.” மனமுடைந்து பேசிய சமந்தா – வைரலாகும் வீடியோ இதோ..

“அக நக’ பாடல் வரிகள் Tongue twisters மாதிரி இருந்துச்சு..” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..
சினிமா

“அக நக’ பாடல் வரிகள் Tongue twisters மாதிரி இருந்துச்சு..” பின்னணி பாடகி ஷக்திஸ்ரீ கோபாலன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“யாரையாவது டேட்டிங் செய்யலாமே?” என்ற கேள்விக்கு சமந்தா கொடுத்த பதில் – ரசிகர்களிடையே வைரலாகும் பதிவு இதோ..