“வடிவேலு தேவையில்லாம காசுக்கு ஆசப்பட்டான்.. இல்லன்னா..” ரமேஷ் கண்ணா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ..

வைகைப்புயல் வடிவேலு குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - Comedy Actor Ramesh Khanna About Vadivelu | Galatta

தமிழ் சினிமாவில் மிக பரிச்சையாமான  நடிகராக இருப்பவர் நடிகர் ரமேஷ் கண்ணா. 90 களில் பிறந்தவர்களுக்கு இவரை பற்றி தெரியாமல் இருக்காது. ஏன் சமீபத்தில் டிரெண்ட் ஆன நேசமணி மீம்களிலும் இவர் மிக முக்கியமான இடம் வகித்து பிரபலமானவரும் கூட. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய இவர் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘தொடரும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமானவர் அதே நேரத்தில் எழுத்தாளராகவும் திரைக்கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் அதிகப்படியான படங்களில் பணியாற்றியவர். அதன்படி ஆதவன், முனி, பெரிய குடும்பம் ஆகிய படங்கள் பிரபலம். இதுமட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர நடிகராகவும் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிப்பில் மிக பிரபலமான படங்களான ‘படையப்பா, ‘பிரண்ட்ஸ், ‘வில்லன், ‘அட்டகாசம், ‘மிலிட்டரி’, ‘துள்ளுவதோ இளமை, ‘ஆதவன் என்று பட்டியலிட்டே போகலாம். தனித்துவமான நகைச்சுவை கவுண்டர்களை அடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் வல்லவராக இருந்த இவர், தமிழில் முன்னணி நடிகராக இருந்த அஜித், விஜய், சூர்யா, விக்ரம், மாதவன். தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நகைச்சுவை நடிகராகவும் பன்முக திறன் கொண்ட கலைஞராகவும்  வலம் வந்த ரமேஷ் கண்ணா நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் நடிகர் வடிவேலு உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கையில் அவர்,

"வடிவேலு இயக்குனர் சொல்றத அப்படியே அவர் ஸ்டைல்ல பண்ணிடுவார். அவன் தேவையில்லாம காசுக்கு ஆசப்பட்டு விட்டான்.. இல்லன்னா அவன அடிக்க ஆளே கிடையாது. சின்ன விஷயத்தை கூட பெருசா பண்ணுவான். அது எல்லாம் கை வந்த கலை. என்னால் அவரை போல் பண்ண முடியாது. நான் வேற மாதிரி டிராக் ல போயிட்டேன்.‌ விவேக் கருத்துக்களை சொல்லி அப்படி போயிட்டாரு..” என்றார்

மேலும் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா அவர்கள் கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

 

‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..
சினிமா

‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..

“நான் அவர ரொம்ப Miss பண்றேன்..” மேடையில் கண்ணீர் விட்ட ஏ ஆர் முருகதாஸ் – வைரல் வீடியோ இதோ..
சினிமா

“நான் அவர ரொம்ப Miss பண்றேன்..” மேடையில் கண்ணீர் விட்ட ஏ ஆர் முருகதாஸ் – வைரல் வீடியோ இதோ..

“நான் பாத்திரம் கழுவிருக்கேன்.. டீ, காபி கொடுத்துருக்கேன்..” மனம் திறந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வைரலாகும் Motivational வீடியோ இதோ..
சினிமா

“நான் பாத்திரம் கழுவிருக்கேன்.. டீ, காபி கொடுத்துருக்கேன்..” மனம் திறந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் – வைரலாகும் Motivational வீடியோ இதோ..