விஜய், சூர்யா, வடிவேலுவுடன் ஃப்ரண்ட்ஸ் பட EPIC காமெடி காட்சி உருவான விதம்... மனம் திறந்த ரமேஷ் கண்ணாவின் கலகலப்பான வீடியோ இதோ!

ஃப்ரண்ட்ஸ் பட EPIC காமெடி காட்சி உருவான விதம் பற்றி பேசிய ரமேஷ் கண்ணா,ramesh khanna shared shoot experience of friends movie | Galatta

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவரான நடிகர் ரமேஷ் கண்ணா எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். குறிப்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் உதவி மற்றும் இணை இயக்குனராக பல படங்களில் ரமேஷ் கண்ணா பணியாற்றி உள்ளார். அதேபோல் சூரியவம்சம், காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், தெனாலி, வெற்றி கொடி கட்டு, வானத்தைப்போல, ஃபிரண்ட்ஸ், வில்லன், உன்னை நினைத்து, பஞ்சதந்திரம், பம்மல்.K.சம்பந்தம், ஜெமினி, சாமி, அட்டகாசம், தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகராக மக்களின் மனதை கவர்ந்தவர்.

இந்த நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய ரமேஷ் கண்ணா அவர்கள் ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தின் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம், “இப்போதெல்லாம் இரண்டு ஸ்டார் நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதெல்லாம் பார்க்கிறோம் RRR மாதிரி படங்களில், ஆனால் அப்போதே விஜய் சாரும் சூர்யா சாரும் ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்... உங்களுடைய காம்பினேஷன் இப்போதும் கூட பெரிய ட்ரெண்டானது. அந்த இருவருக்குள் நடுநிலையான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் உங்களது கதாபாத்திரத்தை எப்படி புரிந்து கொண்டீர்கள்?" எனக் கேட்ட போது, “ஃபிரண்ட்ஸ் திரைப்படம் மலையாளத்தில் முதலில் பண்ணப்பட்டது. ஜெயராம் கதாபாத்திரத்தில் தளபதி விஜய்யும் முகேஷ் கதாபாத்திரத்தில் சூர்யாவும்… சீனிவாசன் கதாபாத்திரம் தான் எனது... ஸ்ரீனிவாசன் ஒரு இயக்குனர், எழுத்தாளர், நடிகர்... அப்போது அதே மாதிரியான ஒரு ஆள் வேண்டும் என தேடிய போது இங்கிருந்த ஒரே ஆள் நான் தான். இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என்றால் அது நான் தான். சரிதா மேடம் தான் என்னை கூப்பிட்டு பேசினார்கள். அப்போது சூர்யா அவர்களுக்கெல்லாம் பெரிய மார்க்கெட் கிடையாது. விஜயை முன்னிறுத்தி தான் அந்த படம். அப்போது சூர்யா 24 மணி நேரமும் என்னோடு தான் இருப்பார். அப்போது மலையாளத்தில் படம் பார்த்த என்னுடைய நண்பர் அகமத், என்னிடம், “அந்த சீனிவாசன் கதாபாத்திரம் நீ செய்தால் நன்றாக இருக்கும்”, என சொன்னார். முதலில் அந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் அந்த இயக்குனர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு தான் அதைப் பற்றி நாம் பேச முடியும் என்றேன். ஆனால் கடவுளால் அந்த கதாபாத்திரம் அதுவே வந்து அமைந்தது. இன்று வரை ஃப்ரண்ட்ஸ் தான் நம்மளை காப்பாற்றுகிறது.” என்று தெரிவித்தார். தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் வடிவேலு விஜய் மற்றும் சூர்யா ஆகியரோடு இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து பேசியபோது, “ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு அந்த கடிகாரத்தை உடைக்கும் ஒரு காட்சி இருக்கிறது அல்லவா? அந்த காட்சியில் பிடிக்கல பிடிக்கல பிடிக்கல என சொல்லும்போது கீழே போட்டு விடுவார்கள்... உடைந்த உடன் ராதாரவி அவர்கள் வந்து, “என்னடா இது 200 வருஷமா ஓடின ஒரு கடிகாரத்தை உடைச்சிட்டீங்களேடா பாவி என சொன்னதும்... நல்ல காலம் நாங்க ஏதோ புதுசுன்னு நினைச்சிட்டோம்…” என சொல்லும் அந்த காட்சியில் அந்த கடிகாரத்தை உடைத்தவுடன் சூர்யாவும் விஜயும் ஷாட்டில் சிரித்து விடுவார்கள். அது ஆன்டிக் கடிகாரம் ஒருமுறை உடைந்தால் மீண்டும் தயார் செய்வதற்கு 20 - 30 நிமிடங்கள் ஆகும். எல்லாம் தயார் செய்து மறுபடியும் உடைக்கும்போது மறுபடியும் சிரித்து விடுவார்கள். மூன்றாவது முறை தான் அந்த ஷாட் ஓகே ஆனது. இப்போதும் கூட படத்தில் அந்த ஷாட்டை பாருங்கள் அவர்கள் இருவரும் திரும்பி ஒரு மாதிரி சிரித்துக் கொள்வார்கள். ஆனால் எனக்கும் வடிவேலுவுக்கும் சிரிப்பே வராது” என தெரிவித்துள்ளார். ரமேஷ் கண்ணா அவர்களின் கலகலப்பான அந்த முழு பேட்டி இதோ…
 

இதுவரை வெளிவராத தளபதி விஜயின் துப்பாக்கி பட வசனத்தின் ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரலாகும் வீடியோ இதோ
சினிமா

இதுவரை வெளிவராத தளபதி விஜயின் துப்பாக்கி பட வசனத்தின் ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரலாகும் வீடியோ இதோ

'சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண் கலங்கியது ஏன்?'- உண்மையை உடைத்த சமந்தாவின் எமோஷனலான பேட்டி இதோ!
சினிமா

'சாகுந்தலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கண் கலங்கியது ஏன்?'- உண்மையை உடைத்த சமந்தாவின் எமோஷனலான பேட்டி இதோ!

ஆதித்த கரிகாலன் பராக்.. பராக்.!- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மாஸான புதிய ப்ரோமோ இதோ!
சினிமா

ஆதித்த கரிகாலன் பராக்.. பராக்.!- ட்ரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் மாஸான புதிய ப்ரோமோ இதோ!