“அஜித் என்னென்ன பிரச்சனைகளை பார்த்தார் என்று எங்களுக்கு தெரியும் “ நடிகர் ரமேஷ் கண்ணா.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

அஜித் குமார் பற்றி நடிகர் ரமேஷ் கண்ணா பகிர்ந்த சுவாரஸ்யமான வீடியோ இதோ - Actor Ramesh Khanna about ajith kumar | Galatta

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித் குமார் இந்த 2023 ஆண்டு மிகப்பெரிய வெற்றி திரைப்படமான துணிவு திரைப்படத்துடன் தொடங்கினார். அவரது அடுத்த படமான AK62  திரைப்படத்திற்கான வேலை மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில் அவரது தந்தை சுப்பிரமணியம் உடல்நிலை காரணமாக உயிரிழந்தார். இந்த சோக நிகழ்வினை யடுத்து அஜித் அவருக்கு அவரது குடும்பத்தாருக்கும் தமிழ் நாடு முதல்வர் மற்றும் முக்கிய திரைபிரபலங்கள் மற்றும் லட்சக் கணக்கான ரசிகர்கள் தங்களது ஆறுதல்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வையடுத்து அஜித்தின் நெருங்கிய நண்பரும் முக்கிய திரைபிரபலமுமான ரமேஷ் கண்ணா அவர்களிடம் அஜித் அவர்கள் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில்  விசாரிக்கையில் அவர்,

"நடிகரா உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் தான் எனக்கு முதல் படம். விக்ரமன் சார் புண்ணியத்தில் வந்தது. அந்த படத்தில் அஜித் சார்  2வது பாதியில் கௌரவ தோற்றத்தில் வந்திருப்பார். அதுக்கு பிறகு 'நீ வருவாயென' அந்த படத்திலும் கௌரவ தோற்றத்தில் வரார். இப்படி எல்லா படத்திலும் என்கூட டிராவல் பண்ணிருக்காரு.. கடைசியாக ‘வீரம்’ படத்தில் இணைந்தோம். இப்போதெல்லாம் காமெடியனே படத்தில் போடுறது இல்ல அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பும் இல்ல.." என்றார். மேலும் அட்டகாசம் படம் குறித்து. "அட்டகாசம் படத்தில் பொருட்காட்சி காட்சியில் நான் அஜித்தை வைத்து கொண்டு கார் ஓட்டும் காட்சியில் சரியாக காரை திருப்ப வேண்டும்.‌ நான் சரியான நேரத்தில் காரை திருப்பினேன். அஜித் அவர் என்ன பார்த்து 'சார் நல்லா கார் ஓட்றீங்க' என்றார். நான் உடனே அவர பார்த்து 'நீ ரேஸ்லாம் போயிருக்க‌. நீ சும்மா சொல்லாத என்றேன்.  அந்தளவு அவர் தன்னடக்கம் உள்ளவர்." என்றார்.

அஜித் அவரது தந்தை மரணம் குறித்து, "நான் அன்று கோயம்புத்தூரில் மாட்டிக் கொண்டேன் அதனால் போக முடியவில்லை. அவரை பொறுத்தவரை நாம் பார்க்கும் அஜித் வேறு.. ஆனால் நான் விவேக் சரண் அஜித் லாம் காதல் மன்னன் படம் அன்றிலிருந்தே பயணித்து வருகிறோம். அதனால் அஜித் என்னென்ன பிரச்சனை பார்த்தார் என்று எங்களுக்கு தெரியும். வாழ்கையில் சரி, உடம்பிலும் சரி.. நிறைய விஷயங்கள், தடைகளை தாண்டி வந்தவர். அப்பா இறந்தது நிச்சயமா மேலும் ஒரு சோதனை தான். அவர் அப்பா பற்றி பேசுனது இல்ல.‌அதற்கான வாய்ப்பு இல்லை. படப்படிப்பில் அரட்டைதான் அடிப்போம்.

வில்லன் படப்பிடிப்பில் அவர் சீரியஸான காட்சி பேசுவார் நான் இந்த பக்கம் சிரிச்சு பேசிட்டு இருப்போம். உடனே அவர் இயக்குனரிடம் புகார் சொல்லுவார்.‌அது விளையாட்டான பிரச்சனையா இருக்கும்.. அந்த நிகழ்வில் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என்று நினைத்தார் நிறைய ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். அப்பாவிற்கு மரியாதை செலுத்த முடியவில்லை என்று..  அஜித் சொன்னா அவரது ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவார்கள். எந்த பிரச்சனையும் அஜித் சார் ரசிகர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள்.‌ தீவிரமான ரசிகர்கள் அவர்கள்.” என்றார் ரமேஷ் கண்ணா.

மேலும் எழுத்தாளரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா அவர்கள் கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? - Mute போட்ட தணிக்கை குழு.. விவரம் இதோ..
சினிமா

வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? - Mute போட்ட தணிக்கை குழு.. விவரம் இதோ..

‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..
சினிமா

‘AK 62’ அப்டேட் கொடுத்த லைகா நிறுவனம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..

“நான் அவர ரொம்ப Miss பண்றேன்..” மேடையில் கண்ணீர் விட்ட ஏ ஆர் முருகதாஸ் – வைரல் வீடியோ இதோ..
சினிமா

“நான் அவர ரொம்ப Miss பண்றேன்..” மேடையில் கண்ணீர் விட்ட ஏ ஆர் முருகதாஸ் – வைரல் வீடியோ இதோ..