நந்தினியாக கொல்லக்கூடிய வசீகரத்தில் ஐஸ்வர்யா ராய்... பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான புது GLIMPSE இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த புது ப்ரோமோ,ponniyin selvan 2 movie new promo of aishwarya rai as nandhini | Galatta

இதுவரை தமிழ் திரையுலகம் கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக இந்திய சினிமாவில் பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவிய இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்டனர். அதே சமயத்தில் பலமுறை முயற்சி செய்த இயக்குனர் மணிரத்னம் விடாமுயற்சியின் பலனாக தனது கடின உழைப்பால் பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவமாக்க, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். 

மனதை வென்ற பொன்னியின் செல்வன் நாவலின் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் பெரும் விருந்து வைத்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக நாளை மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்டமான இசை & ட்ரெயலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் ட்ரெய்லர் வெளியாக இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது என்பதை குறிப்பிடும் வகையில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரத்தின் அட்டகாசமான புதிய ப்ரோமோ வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மாஸ் ஹீரோ... அதிரடி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் ஆயுத பூஜை ரேசில் களமிறங்கும் மாஸ் ஹீரோ... அதிரடி படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்த வந்த மிரட்டலான புது GLIMPSE இதோ!
சினிமா

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் தயார்... ரசிகர்களை உற்சாகப்படுத்த வந்த மிரட்டலான புது GLIMPSE இதோ!

இதுவரை வெளிவராத தளபதி விஜயின் துப்பாக்கி பட வசனத்தின் ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரலாகும் வீடியோ இதோ
சினிமா

இதுவரை வெளிவராத தளபதி விஜயின் துப்பாக்கி பட வசனத்தின் ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரலாகும் வீடியோ இதோ