தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.சிறு வயதில் இருந்தே நடிக்கும் இவருக்கு எந்த அளவு புகழ் வந்ததோ அந்த அளவு பல சர்ச்சைகளையும் கடந்து வந்துள்ளார் சிம்பு.என பிரச்சனைகள் வந்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விட்டுக்கொடுத்ததில்லை.

உடல் பருமனாக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த STR அல்டிமேட்டாக ட்ரான்ஸ்பார்ம் ஆகி பழைய நிலைக்கு திரும்பினார்.இவரது ட்ரான்ஸ்பரமேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இதனை அடுத்து பத்துதல,வெந்து தணிந்தது காடு,கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அசத்தினார் சிலம்பரசன்.சில வருடங்கள் சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த சிம்பு ட்ரான்ஸபோர்மேஷனுக்கு பிறகு சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கத்தொடங்கினார் சிம்பு.

அவ்வப்போது ஏதேனும் ஒரு அப்டேட் அல்லது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று பகிர்ந்து வருவார் சிலம்பரசன்.தற்போது இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் ரசிகர்களை பெற்று இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.