பிரபல மாடல் ஆக தனது மீடியா பயணத்தை தொடங்கி பிரபலமான சீரியல் நடிகையாக அசத்தி வருபவர் ஐஸ்வர்யா சாலிமத்.கன்னடத்தில் மாடலாக தொடங்கி பின்னர் கன்னட சீரியல்களில் என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா சாலிமத்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணமாம் கல்யாணம் தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஐஸ்வர்யா சாலிமத்.இதனை தொடர்ந்து அக்னிசாக்ஷி என்ற தெலுங்கு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இவற்றை தவிர ஒரு கன்னட படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா சாலிமத்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவற்றை தவிர கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான உயிரே தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார் ஐஸ்வர்யா.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.தற்போது இவருக்கும் பிரபல கன்னட சீரியல் நடிகர் வினய் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.