விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது அவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான்.அப்படி விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.பல நட்சத்திரங்களை விஜய் டிவி சீரியல்கள் உருவாக்கியுள்ளனர்.

அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட் அடித்து வரும் சீரியல் நம்ம வீட்டு பொண்ணு.சுர்ஜித் குமார் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வருகிறார்.அஷ்வினி ஆனந்திதா இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடரின் மூலம் இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ரசிகர் பட்டாளங்கள் உருவாகி உள்ளன.

வெங்கட்,ஜாக்,அருணிமா சுதாகர்,அம்ரிதா அபிஷேக்,ரவி சந்திரன்,பிரியதர்ஷினி,ஷெரின் ஜானு என பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் வெற்றி தொடராக சென்று வருகிறது.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடரில் பூவே உனக்காக தொடரில் ஹீரோவாக முதலில் நடித்து பின்னர் விலகிய அருண் புது என்ட்ரியாக இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.