இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன்.TR தற்போது தயாராகி வருகிறார். பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகும் இந்த படத்திற்காக முற்றிலும் மிரட்டலான புதிய LOOK-க்கு தன்னை தயார் படுத்திக் கொள்ளும் நடிகர் சிலம்பரசன்.TR அதற்காக பிரத்தியேகமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் சிலம்பரசன்.TR உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. கடுமையாக உடற்பயிற்சி செய்யும் தனது வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நடிகர் சிலம்பரசன்.TR, "உனக்காக வருகிறேன் #STR48" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் பெரிய கம் பேக் கொடுத்த நடிகர் சிலம்பரசன்.TR, மாநாடு திரைப்படத்தில் மாஸ் ஹிட் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தேர்ந்த நடிகராக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் உடல் அளவிலும் நடிப்பிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்த சிலம்பரசன்.TR அதில் வெற்றியும் அடைந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் தனது லுக்கில் ஒரு புதுமையை கொண்டு வந்து STR48 படத்தில் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயாராகி வருகிறார் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வரும் சிலம்பரசனின் அந்த உடற்பயிற்சி வீடியோ இதோ…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இயக்குனர் தேசிங் பெரியசாமி, சூப்பர் ஸ்டாருக்காக எழுதிய ஒரு அதிரடியான கதை தான் STR48 படத்தின் கதை என்றும் இதில் சிலம்பரசன் நடிப்பதற்காக சிறு சிறு மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் STR48 திரைப்படத்தை தயாரிக்கிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் STR48 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் படமாக STR48 திரைப்படம் தயாராக இருப்பதாக தெரிகிறது. எனவே இதற்கான பணிகளுக்காக தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக சிலம்பரசன்.TR சமீபத்தில் லண்டன் சென்று வந்தார். இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது STR 48 திரைப்படத்தின் மிரட்டலான புதிய லுக்கிற்கு மாறுவதற்காக நடிகர் சிலம்பரசன்.TR தற்போது தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடைசியாக சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பத்து தல. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்களின் நடிப்பில் வந்த கன்னட படமான மஃப்டி பட ரீமேக்காக சிலம்பரசன்.TR நடித்த பத்து தல படமும் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக, நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் STR48 திரைப்படத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கிறார். வெகு விரைவில் இந்த அதிரடியான திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.