லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் முதல் படமான FIGHT CLUB திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. உரியடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான விஜய் குமார் அவர்கள், அடுத்து கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் இந்த FIGHT CLUB. சூரரைப் போற்று படத்தின் வசனகர்த்தாவான விஜய் குமார் அவர்களின் முதல் திரைப்படமாக அவர் இயற்கை நடித்த உறியடி திரைப்படம் அதன் சண்டை காட்சிகளுக்காக பெரிதும் பேசப்பட்டது. வித்தியாசமான ஆக்சன் படமாக காலம் கடந்தும் பேசப்படக்கூடிய ஒரு படைப்பாக ரசிகர்களால் கொண்டாடப்படும் உறியடி திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக ஹாலிவுட்டில் பிராட் பிட் கதாநாயகனாக நடித்து உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற FIGHT CLUB என்ற டைட்டில் இந்த படம் வெளிவர இருக்கிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் A ரஹ்மத் திரைக்கதையை எழுதி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்க, அறிவு, அசல் கோளார், கானா மைக்கில், ஷர்பு மற்றும் GKB ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கிருபாகரன் படத்தொகுப்பு செய்ய ஏழுமலை ஆதி கேசவன் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். விக்கி மற்றும் அமிரின் அபூபக்கர் இருவரும் இணைந்து இந்த அதிரடி திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சசி அவர்களின் கதையில் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சசி விஜய் குமார் மற்றும் இயக்குனர் அப்பாஸ் A ரஹ்மத் ஆகிய மூவரும் இணைந்து வசனங்களை எழுதி இருக்கின்றனர். கூடுதல் வசனங்களில் லியோ & விக்ரம் திரைப்படங்களின் பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உரியடி விஜயகுமாரின் அதிரடி ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் FIGHT CLUB சற்று முன்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த டீசர் இதோ…
இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில் தனது G SQUAD தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தொடர்ச்சியாக திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி தனது தயாரிப்பு நிறுவனத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய G SQUAD நிறுவனத்தின் சார்பில் வழங்கும் இந்த FIGHT CLUB ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் FIGHT CLUB திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் என்றாலே அது ஆக்சன் படங்கள் தான் என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை அந்த படங்கள் ஈர்த்திருக்கும் நிலையில், அவரது தயாரிப்பு நிறுவனம் வழங்கும் முதல் படமாக வெளிவரும் FIGHT CLUB திரைப்படம் பெயரிலிருந்து அதிரடியாக இருப்பதால் இதிலும் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது ஒவ்வொரு காட்சிகளும் தலைப்புக்கு ஏற்றவாறு பக்கா ஆக்சன் நிறைந்த படம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்து இருக்கிறது.