இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது G SQUAD தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தின் மூலம் தரமான படங்களை தயாரிப்பாளராகவும் வழங்க இருக்கிறார். தனது முதல் படைப்பாக "உரியடி" விஜயகுமார் கதாநாயகனாக நடித்துள்ள FIGHT CLUB திரைப்படத்தை ரசிகர்களுக்கு பக்கா ஆக்சன் விருந்தாக வழங்க இருக்கிறார் இந்த நிலையில் திரைப்படத்தின் பட விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்கான காரணத்தையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்
“எனக்கு இது மாநகரம் மேடையை போல தான்…” என பேச தொடங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “ஒரு நல்ல FILM MAKER, நல்ல நடிகன் என்னுடைய நண்பன் என்பதை எல்லாம் தாண்டி நான் என் வாழ்க்கையில் பார்த்த மிகவும் நேர்மையான ஒரு மனிதன் அவன் (விஜய் குமார்). இப்போது எப்படி எமோஷனல் ஆனாரோ அதே மாதிரி இதற்காகவே வெளியிலேயே வராமல் தனியாகவே இருந்து... காலையிலிருந்து மாலை வரை சினிமா சினிமா ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என யோசித்துக் கொண்டே இருந்து, அப்படி ஒரு படத்தை எடுத்து விட முடியாதா ரசிகர்களுக்கு அப்படி ஒரு படத்தை கொடுத்து விட முடியாதா... அதில் அவனுடைய படங்களாக இருக்கட்டும் நடிக்கக் கூடிய படங்களாக இருக்கட்டும் அவருக்கென ஒரு தனி மீட்டர் இருக்கும். அது சினிமாக்காக பண்ணுவதில்லை இயல்பாகவே அவர் அப்படித்தான். நான் இந்த படத்தை என் நிறுவனத்தின் மூலமாக எடுத்து ரிலீஸ் செய்வது விஜயகுமாருக்கு அந்த கம்பெனிக்கோ செய்யும் நல்லதில்லை... என் நிறுவனத்திற்கு நான் செய்து கொள்ளும் நல்லது. அதற்காகத்தான் இந்த படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய வேண்டும் என நினைத்தேன் இதற்குப் பின்னால் ஒரு நேர்மை இருந்தது. விஜய் பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது அதை இன்னொரு மேடையில் பேசுகிறேன்” என்றார்.
தொடர்ந்து “இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. G SQUAD நிறுவனத்தை ஆரம்பித்தது எதற்காக என்றால் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும் ஒரு 5 - 6 திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நிறுவனமாக இதை ஆரம்பிக்கவில்லை உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தாலும் ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரத்தாலும் கடவுளினாலும் இயக்குனராக நான் வாங்கும் சம்பளமே எனக்கு போதும் என்கிற அளவுக்கு இருக்கிறது. அதற்கு மேல் என்ன காரணம் என்றால் 2012 - 13 அந்த சமயத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் அதை திரையிட்டுக் காட்டி தயாரிப்பாளர்களை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் போது என் நண்பர்கள் மட்டுமே பணம் போட்டு குறிப்பாக அதில் சீனி என்கிற ஒருவர் பணம் போட்டு களம் என்கிற ஒரு குறும்படம் எடுத்தோம். அதை திரையிட்டு தயாரிப்பாளர்களை வரவைத்து கிடைத்தது தான் மாநகரம் என்கிற படத்திற்கான வாய்ப்பு. அன்றைக்கு இவன் பெருசாகி விடுவான் அதனால் நமக்கு என்றாவது ஏதாவது நடக்கும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடைய நேர்மைக்காக என்னுடைய நண்பர்கள் எனக்காக பணம் போட்டு பண்ணியது தான் அந்த படம். அதுதான் நான் இப்போது இருக்கிற இந்த மேடை. அதையேதான் நான் திரும்ப இன்னும் 4 பேருக்கு பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக தான் இந்த நிறுவனம் அதனால் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரக்கூடிய பணத்தை எடுத்து எனக்கு தனிப்பட்ட முறையில் ஏதாவது என்றெல்லாம் இல்லை. இந்தப் படத்திலிருந்து சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் இதே நிறுவனத்தில் புதிய திறமைகளை அழைத்து வந்து மீண்டும் படம் மட்டுமே பண்ண வேண்டும் என்பதுதான் ஐடியா... அதுதான் GOALம் கூட... அதற்கான ஒரு முதல் படி தான் இந்த FIGHT CLUB.” என்றார். அந்த முழு பேட்டி இதோ...