அன்னபூரணி SNEAK PEEK: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 75வது படம்… கவனத்தை ஈர்க்கும் விறுவிறுப்பான புது GLIMPSE இதோ!

நயன்தாராவின் அன்னபூரணி பட SNEAK PEEK வெளியீடு,nayanthara in annapoorani movie sneak peek out now | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவரான நடிகை நயன்தாரா திரை பயணத்தில் மற்றொரு மிக முக்கிய படமாக தற்போது வெளிவந்துள்ள திரைப்படம் தான் அன்னபூரணி. வெற்றிகரமான நடிகையாக பலம் வரும் நயன்தாராவின் 75வது திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த அன்னபூரணி திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் இந்த அன்னப்பூரணி திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்சுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கைதி & மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் அன்னப்பூரணி திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

கோயிலில் அர்ச்சகராக கோவிலுக்கு தேவையான பிரசாதங்கள் சமைப்பவரின் மகளாக வரும் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் எம்பிஏ படிக்குமாறு கூற அவர்களின் பேச்சை மீறி மிகப் பெரிய சமையல் கலை வல்லுனராக வேண்டும் என்ற ஆசையோடு வீட்டிற்கு தெரியாமல் எம்பிஏ படிப்பதாக ஏமாற்றிவிட்டு சமையல் கலையை கற்கும் நயன்தாரா ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் வேலைக்கு செல்கிறார் அங்கு அவருக்கு ஏற்படும் தடங்கல்கள் என்னென்ன அதைத் தாண்டி அவர் படைக்கும் சாதனை என்ன என்பதே அன்னபூரணி படத்தின் கரு. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளிவந்த நயன்தாராவின் 75வது படமான அன்னபூர்மை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றபோதும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அன்னபூரணி திரைப்படத்திலிருந்து முக்கிய காட்சி ஒன்று SNEAK PEEK வீடியோவாக வெளிவந்துள்ளது. ராஜா ராணி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் நடிகர் ஜெய் நயன்தாரா கூட்டணி இணைந்து நடித்திருக்கும் இந்த அன்னபூர்வ திரைப்படத்தின் கவனத்தை ஈர்க்கும் அந்த SNEAK PEEK வீடியோ இதோ...

 

கடைசியாக இயக்குனர் அட்லியின் முதல் பாலிவுட் படமாக ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், அடுத்ததாக தற்போது நடிகை நயன்தாரா டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப் படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் மண்ணாங்கட்டி Since 1960 எனும் திரைப்படத்திலும் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இது போக மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இயக்குனரான இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.