கேம் சேஞ்சர்: ஷங்கர் - ராம் சரணின் பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த அட்டகாசமான தகவல் இதோ!

ஷங்கர் - ராம் சரணின் கேம் சேஞ்சர் பட படப்பிடிப்பு குறித்த தகவல்,shankar ram charan in game changer movie shooting update | Galatta

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த மிக முக்கிய தகவலை தயாரிப்பாளர் பகிர்ந்து கொண்டார். முதல்முறையாக நேரடி  தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேசியபோது, "கிட்டத்தட்ட 80 சதவிகித கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இயக்குனர் ஷங்கர் அவர்கள் இந்த ப்ராஜெக்ட்டில் மிகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார். மேலும் ரிலீஸ் தேதி குறித்து மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த பிறகு திட்டமிட இருக்கிறோம்" என தெரிவித்திருக்கிறார். 

கேம் சேஞ்சர் படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்தியன் 2 திரைப்படத்தின் மீதான தடைகள் நீங்கியதால் இரண்டு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் பம்பரமாய் சுழன்று இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கேம் சேஞ்சர் படத்திற்கு கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ராம்சரண் உடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டலான வில்லனாக நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் சபீர் முஹம்மது படத்தொகுப்பு செய்யும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்படத்திற்கான வசனங்களை மத்திய அமைச்சரும் முன்னணி எழுத்தாளருமான சு.வெங்கடேசன் அவர்களும் பாடலாசிரியர் விவேக் அவர்களும் எழுதி இருக்கின்றனர். கேம் சேஞ்சர் திரைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் ஃபேவரட் இயக்குனராக திகழும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 2.O திரைப்படம்  வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களையும் பிரம்மாண்ட படைப்புகளாக உருவாக்கும் இயக்குனர் ஷங்கரின் திரைப்படங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து இமாலய வெற்றி பெற்ற எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்த 2.O திரைப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் தொடங்கினார். ஆனால் விபத்து காரணமாக தடைப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் டீசர் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இதர் அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.