'ஜூன் 9 டக்கர் ரிலீஸிலிருந்து அடுத்த 18 மாதங்களுக்கு..!'- தனது படங்களின் அட்டகாசமான LINE UP குறித்து பேசிய சித்தார்த்! வைரல் வீடியோ

தனது படங்களின் அட்டகாசமான LINE UP குறித்து பேசிய சித்தார்த்,Siddharth shared about his line up for next 18months after takkar | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் டக்கர். இந்த டக்கர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த 18 மாதங்களுக்கு தனது நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் வெளிவர இருப்பதாக சித்தார்த் தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கிய நடிகர் சித்தார்த் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பல படங்களில் நடித்து இந்திய அளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

அடுத்ததாக மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் இணைந்த சித்தார்த், உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களின் இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் சித்தா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் டக்கர். கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்திருக்கும் டக்கர் திரைப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவர இருக்கும் டக்கர் திரைப்படம் வரும் ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் திரு.பரத்வாஜ் ரங்கன் உடனான நேர்காணலில் பேசிய நடிகர் சித்தார்த் டக்கர் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தனது நடிப்பில் தயாராகி வரும் திரைப்படங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்படி பேசுகையில், “ஜூன் 9 டக்கர் ரிலீஸ் ஆகிறது அதைத்தொடர்ந்து எங்களுடைய தயாரிப்பில் தயாராகும் சித்தா, அதைத்தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு ரொமான்டிக் படம், சமீபத்தில் அதை நிறைவு செய்தேன். அடுத்ததாக இந்தியன் 2, பின்னர் மீண்டும் டக்கர் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் அடுத்த படம் மற்றும் தயாரிப்பாளர் சசிகாந்தின் இயக்கத்தில் டெஸ்ட். இவை அனைத்தும் என்னுடைய அடுத்த 18 மாதங்களுக்கான லைன் அப்பில் இருக்கின்றன" என சித்தார்த் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட சித்தார்த்தின் அந்த முழு பேட்டி இதோ…
 

தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!
சினிமா

தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!
சினிமா

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!
சினிமா

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!