புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு... வைரலாகும் படப்பூஜை புகைப்படங்கள் இதோ!

புதிய படத்தை பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபு,vikram prabhu new movie started with pooja | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விக்ரம் பிரபுவின் புதிய திரைப்படத்தின் பட பூஜை இன்று (ஜூன் 7) நடைபெற்றது.  கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விக்ரம் பிரபு தொடர்ந்து தனது 2வது படமான இவன் வேற மாதிரி திரைப்படத்திலேயே ரசிகர்களிடையே மிகப் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரத் துரை, இது என்ன மாயம் எனவே வரிசையாக பல படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இதுவரை பெரிதும் பேசப்படாத காவல்துறையின் மறுபக்கம் குறித்த அழுத்தமான படமாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.

கடைசியாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் மிக முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனை அடுத்து வரிசையாக விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்த ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தை வருகிற ஜூன் 23ஆம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். தொடர்ந்து பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ரெய்டு திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் முத்தையா அவர்கள் இப்படத்திற்கு வசனங்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது புதிய திரைப்படத்தை தற்போது நடிகர் விக்ரம் பிரபு தொடங்கி இருக்கிறார். இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ஈஷா ரெப்பா கதாநாயகியாக நடிக்கிறார். அசோக்செல்வன் & சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமாக தயாராகும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லெமன் லீப் கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் மைக்கேல், தீப்ஷிகா, தீபா பாலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் ரசமதி ஒளிப்பதிவில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக விக்கி பணியாற்றுகிறார். இன்று ஜூன் 7ம் தேதி திரைப்படத்தின் படப் பூஜை நடைபெற்றுள்ள நிலையில், இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் பிரபுவின் அடுத்த புதிய திரைப்படத்தின் படப் பூஜை புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Excited for this one 💪😊🙏
Direction by #RameshRavichandhiran @lemonleafcreat1 @YoursEesha @deepshikhaoffi @Dr_Deepabalu @michael_chennai @DOPrasamathi @GhibranVaibodha #Jayachandiran @ARichardkevin @VickyStunt_dir @SherAli92699616 @onlynikil pic.twitter.com/FaZvqmc7N9

— Vikram Prabhu (@iamVikramPrabhu) June 7, 2023

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சினிமா

"கமல் சார் பத்தி நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கணும்..!"- கண்கலங்கிய சித்தார்த் பகிர்ந்த இதுவரை வெளிவராத தகவல்! ட்ரெண்டிங் வீடியோ

சினிமா

"என் குழந்தைங்க அது.. அவளுக்கு டியூஷன் எடுத்துருக்கேன்..!”- ஜெனிலியா குறித்து மனம் திறந்த சித்தார்த்தின் சுவாரசியமான சிறப்பு பேட்டி இதோ!