10 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசம்.. உற்சாகத்தில் 'ஆதிபுருஷ்' ரசிகர்கள்.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு .. முழு விவரம் உள்ளே..

பத்தாயிரம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும் தயாரிப்பாளர் விவரம் உள்ளே - 10 thousand free tickets for adipurush movie check details | Galatta

இந்த ஆண்டின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இந்தியா முழுவது பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. பிரபல தெலுங்கு நடிகர் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள அதிபுருஷ் திரைப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கும் திரைப்படங்களில் ஒன்று. இராமாயணம் இதிகாசத்தை தழுவி உருவாகியுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராமானாக பிரபாஸ் நடிக்க சீதா தேவியாக கீர்த்தி சனொன் நடித்துள்ளார். இவர்களுடன் சைப் அலிகான் இராவணனாக நடித்துள்ளார். Retrophiles  மற்றும் T Series தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய , அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர்.

முன்னதாக ஆதிபுருஷ் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து முதல் டிரைலரை  மீண்டும் மறு வடிவமைப்பு செய்து கூடுதல் சிறப்பு காட்சிகள் சேர்த்து வெளியிட்டனர் படக்குழு. அதன்படி நல்ல வரவேற்பை பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உருவாக்கியது. மேலும் முதல் டிரைலரை தொடர்ந்து படத்தின் இரண்டாவது டிரைலரும் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்பை மேலும் எகிற வைத்தது.  

Come, lets immerse in a divine cinematic experience with #Adipurush 🙏🏻

10,000+ tickets would be given to all the Government schools, Orphanages & Old Age Homes across Telangana for free by Mr. @AbhishekOfficl

Fill the Google form with your details to avail the tickets.… pic.twitter.com/vnkNTLX2H1

— Abhishek Agarwal Arts (@AAArtsOfficial) June 7, 2023

இந்நிலையில் வரும் ஜூன் 16 தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள ஆதிபுருஷ் படத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகளை இலவசமாக  வழங்க பிரபல தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தெலுங்கானாவில் உள்ள அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லம் மற்றும் முதியோர் இல்லம் சார்ந்தவருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரது பதிவு இணையத்தில் மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது. மேலும் இந்த இலவச டிக்கெட்டினை பெறுவதற்கு சிறப்பு லிங்க் கொடுத்துள்ளனர். முன்னதாக ஆதிபுருஷ் படக்குழுவினர் கடவுள் அனுமானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கை காலியாக விடப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தையடுத்து நடிகர் பிரபாஸ் தற்போது கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். பின் தொடர்ந்து தெலுங்கு இந்தியில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘புரோஜக்ட் கே’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்தின் வெறித்தனமான நடிப்பில் ‘டக்கர்’.. அட்டகாசமான சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

சித்தார்த்தின் வெறித்தனமான நடிப்பில் ‘டக்கர்’.. அட்டகாசமான சிறப்பு காட்சியை வெளியிட்ட படக்குழு – வைரல் வீடியோ உள்ளே..

“சில முறை மட்டுமே சந்திக்க முடியும்..” திருமண நாளில் ரகசியத்தை பகிர்ந்த பிரபல பாடகர் பென்னி தயாள் மனைவி.. – வைரலாகும் பதிவு உள்ளே...
சினிமா

“சில முறை மட்டுமே சந்திக்க முடியும்..” திருமண நாளில் ரகசியத்தை பகிர்ந்த பிரபல பாடகர் பென்னி தயாள் மனைவி.. – வைரலாகும் பதிவு உள்ளே...

ஜிகர்தண்டா படத்தில் விஜய் சேதுபதி வருவாரா? கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் - சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

ஜிகர்தண்டா படத்தில் விஜய் சேதுபதி வருவாரா? கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் சுப்பராஜ் - சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..