தல MSதோனி தயாரிப்பில் முதல் தமிழ் படம் LGM... ஹரிஷ் கல்யாண் - 'லவ் டுடே' இவானா காம்போவின் கலக்கலான டீசர் இதோ!

MSதோனி தயாரிக்கும் LET'S GET MARRIED பட டீசர்,Ms dhoni entertainment first movie lets get married teaser | Galatta

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானுமான மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (Let's Get Married) திரைப்படத்தின் டீசர் வெளியானது. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி நேற்று மே 28ஆம் தேதி அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது கனமழையின் காரணமாக போட்டி அன்று போட்டி நடைபெறாததால் அடுத்த நாளில் (மே 29ஆம் தேதி) நடைபெற்றது. பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற இந்த ஐபிஎல் 2023 இறுதி போட்டியில் கடைசி பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

முன்னதாக கிரிக்கெட்டை தாண்டி திரையுலகிலும் சிக்ஸர் அடிக்க எண்ணிய தல தோனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரித்துள்ளது. அந்த வகையில் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் முதல் படமாக உருவாகி வரும் LGM (Let's Get Married) படத்தை அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்துள்ள LGM (Let's Get Married) படத்தில் லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது போக தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், LGM திரைப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகளில் படக்குழுவினர் தற்போது மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். இறுதிக்கட்ட பணிகள் விரைவில் நிறைவடைந்து வெகுவிரைவில் LGM (Let's Get Married) படத்தை உலகெங்கும் திரையரங்குகளில் வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் LGM (Let's Get Married) திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் திருப்பிய LGM (Let's Get Married) திரைப்படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

SJசூர்யாவின் பொம்மை படத்திற்காக ஒன்றிணைந்த லோகேஷ் கனகராஜ் - பிரதீப் ரங்கநாதன்... காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

SJசூர்யாவின் பொம்மை படத்திற்காக ஒன்றிணைந்த லோகேஷ் கனகராஜ் - பிரதீப் ரங்கநாதன்... காரணம் என்ன? ட்ரெண்டிங் வீடியோ இதோ

10 - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் வழங்கும் ஊக்கத்தொகை… எங்கே..? எப்போது..?- முழு விவரம் இதோ
சினிமா

10 - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் வழங்கும் ஊக்கத்தொகை… எங்கே..? எப்போது..?- முழு விவரம் இதோ

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!