ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல்,kathar basha endra muthuramalingam movie karikuzhambu vaasam video | Galatta

நடிகர் ஆர்யா நடிப்பில் தற்போது ரிலீசாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து விதவிதமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கேப்டன் திரைப்படம் கலையான விமர்சனங்களை சந்தித்தபோதும் அடுத்தடுத்து அவரது நடிப்பில் தயாராகி வரும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதனை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா 2 படத்தில் நடிக்க இருக்கிறார் ஆர்யா. குத்துச்சண்டை மையப்படுத்தி வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றி கூட்டணி சார்பட்டா 2 படத்தில் இணைகிறது. சமீபத்தில் சார்பட்டா 2 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முன்னதாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராக இருக்கும் சங்கமித்ரா படத்திலும் ஆர்யா நடிக்க இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத் திட்டமிட்டிருந்த சங்கமித்ரா திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், விஷால் மற்றும் ஆர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி இயக்க இருக்கும் சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ஆர்யா நடிப்பில் பக்கா கிராமத்து ஆக்சன் என்டர்டெய்னர் படமாக வெளிவந்த திரைப்படம் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் முதல்முறையாக ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரொமான்டிக்கான கறிக்கொழம்பு வாசம் வீடியோ பாடல் இதோ…
 

10 - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் வழங்கும் ஊக்கத்தொகை… எங்கே..? எப்போது..?- முழு விவரம் இதோ
சினிமா

10 - 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு தளபதி விஜய் வழங்கும் ஊக்கத்தொகை… எங்கே..? எப்போது..?- முழு விவரம் இதோ

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
சினிமா

ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ஸ்பெஷல் அப்டேட்... தயாரிப்பு நிறுவனத்தின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சினிமா

"கமல் சார் பத்தி நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கணும்..!"- கண்கலங்கிய சித்தார்த் பகிர்ந்த இதுவரை வெளிவராத தகவல்! ட்ரெண்டிங் வீடியோ